sridevi

ஸ்ரீதேவியின் மாம்

News

sridevi

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார் ஸ்ரீதேவி. பின்னர் நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘புலி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் திரும்ப பெற்றார்.

இந்நிலையில், தற்போது ‘மாம்’ (MOM) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தை ரவி உதயாவர் என்பவர் இயக்கி வருகிறார். வருகிற ஜுலை 14-ந் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

Sridevi Mom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *