full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

சிவகார்த்திகேயன், அனிருத்தை தொடர்ந்து சிம்பு

‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘ரங்கூன்’ படத்தை தயாரித்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை அனிருத் வெளியிட்டார். இந்நிலையில், அடுத்த பாடலை சிம்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கௌதம் கார்த்திக் நடிப்பில் எந்த படமும் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், இந்த ‘ரங்கூன்’ படம் அவருக்கு ஒரு பெரிய வெற்றிகரமான ஆரம்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.