ஆலியா பட் நடித்த பாத்திரத்தில் ஷிவானி

News

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர். நடிகர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. இவர் பிரபுசாலமன் இயக்கும் ‘கும்கி-2’ படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அதில் நடிக்கவில்லை.

இந்நிலையில், ஷிவானி நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஷிவானி தனது முதல் படமாக இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்த 2014-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘2 ஸ்டேட்ஸ்’ என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் தெலுங்கில் பல படங்களை இயக்கி, நடித்துள்ள அடிவி சேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தியில் ஆலியாபட் நடித்த நாயகி பாத்திரத்தில் ஷிவானி நடிக்கிறார்.

வெங்கட் ரெட்டி இயக்கும் இந்த படத்தை லக்‌ஷ்யா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனூப் ரூபன்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.