விரைவில் வெளியாகும் சவரிக்காடு

News

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் சவரிக்காடு. இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.என்.கிருஷ்ணகுமார் இயக்கி வருகிறார். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் இது.. இந்த படத்திற்காக “காடு காடு சவரிக்காடு, நெஞ்சில் துணிவிருந்தால் நெருங்கிப் பாரு…” என்ற பாடல் காட்சிக்காக சவரிக்காடு என்ற பெயர் பொறித்த சட்டைகள் உருவாக்கப்பட்டு சென்னை மற்றும் மலேசியாவில் பொது மக்கள் பங்கேற்க பாடலை படமாக்கினார்கள். இந்த பாடல் காட்சியில் திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர்… நண்பர்களைப் பற்றியும் நட்பைப் பற்றியும் உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக சவரிக்காடு உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளி வர உள்ளது’ என்றார்.