full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

இமயமலைக்குப் புறப்படும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா இரண்டிலுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். “2.0”, “காலா” இரண்டுமே ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. சமீபத்தில் “காலா” திரைப்படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினி, தான் வருடத்திற்கொரு முறை மேற்கொள்ளும் இமயமலை பயணத்திற்குப் புறப்பட இருக்கிறார். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தவறாமல் இமய மலைக்குச் சென்றுவிடும் ரஜினி, இந்த முறையும் பயணப்படுகிறார்.

இதற்காக நாளை புறப்படும் ரஜினி, குறைந்த பட்சம் 10 நாட்களாவது இமயமலையில் தங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.