full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

யூ-டியூப் தயாரிப்பில் வில் ஸ்மித் – பிரியங்கா சோப்ரா!!

சொல்லப்போனால் இந்திய நடிகைகளிலேயே பிரியங்கா சோப்ரா மிகச் சிறந்த உதாரணம். வெருமனே பாலிவுட் படங்களோடு தன்னை நிருத்திக் கொள்ளாமல் உலக அரங்கிலும் கால் பதித்ததோடு மட்டுமல்லாமல், வெற்றி பெற்றும் காண்பித்திருக்கிறார். அதனால் தான் ஹாலிவுட் படங்களில் நடிக்கவே முக்கியத்தும் கொடுத்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா நடிப்பில் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் “குவாண்டிகோ” சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் ரசிகர் பட்டாளத்தையும் அவருக்குத் தந்தது. அதன் பயனாகத் தான் ஹாலிவுட் நடிகர் ராக்குடன் “பேவாட்ச்” படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா அடுத்து வில்ஸ்மித்துடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் வெப் சீரிஸ் ஒன்றில் ஜோடி சேர இருக்கிறார்களாம். இந்த வெப் சீரியஸை யூடியூப் இணையதளமே நேரடியாக தயாரிக்க இருக்கிறது. இந்த வெப் சீரீஸ் வெளியானதும் ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ராவின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயரும் என இப்போதே எல்லோரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.