full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

பரிவர்த்தனை திரைவிமர்சனம்

   பரிவர்த்தனை திரைவிமர்சனம்

M S V புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு ” பரிவர்த்தனை ” என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜய் டிவியில்  நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி இந்த படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர் 

கதை

 சிறுவயது முதல் பால்காரன் பையனும் பண்ணையார் பொண்ணும் படித்துவருகிறாராகள். சில வருடங்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள்.இவர்கள் காதல் பண்ணையாருக்கு தெரியவர பெண்ணை சொந்தகாரங்க வீட்டுக்கு அனுப்பிவிட்டு பால்காரர் பையனை திருடனாக பட்டம் கட்டி அடித்துவிடுகிறார்கள். இதனை ஜீரணித்துக்கொள்ளாத பால்காரர் பையனை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்று பையனை படிக்கவைத்து டாக்டராக்கி தனியாக மருத்துவமனையும் அமைத்து கொடுத்து கல்யாணமும் செய்துவைக்கிறார். கதநாயகனுக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் மனைவியுடன் வாழாமல் காதலியுடன் நினைவிலே இருக்கிறார். கணவன் காதலித்த பெண் யார் என்று கண்டுபிடித்து சேர்த்துவைத்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 
நாயகன் சுர்ஜித் நாயகி சுவாதி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறுவயது நாயகன நாயகியாக நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் இதில் நடித்த பாரதிமோகன் இளம் வயது நாயகர்களாக நடித்த விக்ரம் ஆனந்த் மாஸ்டர் விதுன் இளவயது நாயகிகளாக சுமேகா , ஹாசினி மற்றும் இவர்களுடன் ரயில் கார்த்தி நடித்துள்ளார்.

 கோகுலின் ஒளிப்பதிவு பலம் , ரஷாந்த் அர்வின் இசை அருமை,
கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் பாடல்கள்  ரசிக்கும் ரகம்.

காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக கொடுத்துள்ளார் இயக்குனர் மணிபாரதி.படக் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள்.