full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

ஓவியா படத்தில் சிம்பு!!

படங்களில் நடித்து பெற்ற புகழை விட “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகை ஓவியாவிற்கு புகழ் இமாலய அளவிற்குக் கிடைத்தது.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகை ஓவியாவிற்கு பெரிய பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் “காஞ்னா-3”
படத்திலும், “களவாணி-2” படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில்
ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார். இதற்கு முன் சந்தானத்தின் “சக்க போடு போடு ராஜா” படத்தை தொடர்ந்து
ஓவியாயின் இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“குளிர் 100 டிகிரி” படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.
அந்தப் படத்தின் தலைப்பு “90 எம்.எல்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.