full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

விஜய் 62 நயன்தாரா அவுட்!

மெர்சல் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸுடன் இணைவது உறுதியான ஒன்றுதான். இருந்தாலும் இந்தப் படத்திற்கான கதாநாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் யார் யாரென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேரவே இல்லை. அதேபோல் முருகதாஸ் தனது முதல் படமாகிய தீனாவிற்குப் பிறகு யுவனுடன் பணியாற்றவே இல்லை. இந்நிலையும் இம்மூவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா அல்லது ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக, நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 2009-ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் மட்டுமே நயன் தாரா விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.