நயன்தாரா நடிக்கும் படத்தின் புதிய புகைப்படங்கள்!!

News

நடிகர் ராம்சரண் தயாரிப்பில் அவரது தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் ஆகிய சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் “சாயிரா நரசிம்ம ரெட்டி”. இந்தப் படத்தில் இந்திப் பட உலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி மற்றும் ஜகபதி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

பாகுபலியை மிஞ்சும் வகையில் வியக்க வைக்கும் காட்சியமைப்புகளோடு வரலாற்றுப் பின்னணி கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.