full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

நட்புனா என்னானு தெரியுமா; விமர்சனம் 3.50 /5

வின், ராஜு, அருண்ராஜா காமராஜா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம்.இப்படத்தினை சிவா அரவிந்த் இயக்கியிருக்கிறார்.
படத்தின் கதைப்படி,
கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் சிறு வயதில் இருந்தே இணை பிரியா நண்பர்கள். பத்தாம் வகுப்போடு படிப்பினை நிறுத்திக் கொண்ட மூவரும் பல வருடங்கள் கழித்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ள முடிவுக்கு வருகின்றனர்.
அந்த ஏரியாவில் திருமண நிகழ்வு வேலைகளை காண்ட்ரக்ட் எடுத்து செய்து தொழில் நடத்தி வருபவர் இளவரசன். இளவரசனுக்கு போட்டியாக மூவரும் திருமண நிகழ்வு வேலைகளை காண்ட்ரக்ட் எடுத்து தொழில் செய்யத் தொடங்குகின்றனர்.
தொழிலும் கைமேல் பலன் தரும் வேலையில், இவர்களுக்குள் நாயகி ரம்யா நம்பீசன் நுழைகிறார். ரம்யா நம்பீசனால் இணைபிரியா நட்புகளாக இருக்கும் மூவருக்குள்ளும் பிளவு ஏற்பட்டு பிரிகின்றனர். இறுதியில் இவர்கள் நட்பு சேர்ந்ததா..?? ரம்யா நம்பீசன் யாரை கரம் பிடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் படத்தின் கதைக்கு ஏற்ற சரியான தேர்வு. தனது நடிப்பை மிகச் சரியான முறையில் கொடுத்திருக்கின்றனர் மூவரும்.
நாயகி ரம்யா நம்பீசன் அழகு தேவதையாக வலம் வருகிறார். மார்டன் பெண்ணாகவும், சேலையில் தேவதையாகவும் காட்சியளித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.
முதல் பாதியில் கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல், இருந்த நமக்கு இரண்டாம் பாதியில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த சரியான பொழுது போக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா அரவிந்த். காமெடிக்கென்று தனி கேரக்டர் இல்லை என்றாலும், அந்த டைமிங்கில் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. தரன் தன்னுடைய இசையில் இன்னும் மெனக்கெடல் தேவைப்படுகிறது. பின்னனி இசை ஓகே ரகம். யுவா ஒளிப்பதிவு கலர்புல்.
நட்புனா என்னானு தெரியுமா – காமெடி சரவெடி