நரிவேட்டை திரைவிமர்சனம்
நடிகர்கள்: டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த மாதவன்.
எழுத்து: அபின் ஜோசப்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : விஜய்
இயக்கம்: அனுராஜ் மனோகர்,
தயாரிப்பு: இந்தியன் சினிமா கம்பெனி

தான் பிடித்த வேலைக்கு தான் போவேன் என்று, கிடைக்கும் வேலைலாம் தட்டி விடுகிறார் தனது தாயுடன் ஒரு எளிமையான வாழ்வில் வாழ்ந்து வருகிறார் இதற்கு இடையில் காதல் வாசப்படுகிறார்.
பிறகு தன் தாயின் கஷ்டத்தை புரிந்துகொள்ள. போலீஸ் வேலையில் சேருகிறார், ட்ரெய்னிங்கில் இருந்து கொண்டே தனது படிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கிறார் டோவினோ.

எதிர்பாராமல் ஓரு போராட்ட களத்திற்கு செல்ல வேண்டும் சூழல் வருகிறது.அங்கு மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு அரசிடம் உள்ளிருப்பு போராட்டமாக மலைபிரதேசத்தில் குடிசை அமைத்து அம்மக்கள் போராடி வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் உயரதிகாரி சேரன் தலைமையில், அங்கு போலீஸ் குவிக்கப்படுகிறது.
இக்கட்டத்தில் யார் வென்றார்? கதநாயகனின் கனவு என்ன ஆனது என்று தான் மீதி கதை
கதையின் நாயகனாக மிக அழகாக பொருந்தியிருக்கிறார் டோவினோ தாமஸ் பல இடங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
சேரனின் நடிப்பு இல்லாமல் போனது படத்தில் பெரும் குறைதான் என்றே கூறலாம்.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் நம்மை கதைக்குள் பயணிக்க வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அதிலும், மலைவாழ் மக்களுக்கும் போலீஸுக்கும் நடக்கும் மோதலை படமாக்கிறார், ஒளிப்பதிவாளருக்கு பெரும் வாழ்த்துகள். நாயகி பிரியம்வதா கிருஷ்ணன் பார்ப்பதற்கு அழகு.
மிக அழகாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதிகாரத்தின் உச்சவரம்பானது எதுவரை எல்லை மீறும் என்பதையும் மிக அழகாகவே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

