full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

“யு-டர்ன்” அடிக்கும் நரேன்!!

இயக்குநர் மிஷ்கினால் “சித்திரம் பேசுதடி” அறிமுகப் படுத்தப்பட்டவர் நடிகர் நரேன். அதனைத் தொடர்ந்து மிஷ்கினின் “அஞ்சாதே” படத்தில் நாயகனாகவும், “முகமூடி” படத்தில் வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சீரான இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும் பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை. இவர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கத்துக்குட்டி” படம் இந்த வாரம் மறுபடியும் திரைக்கு வந்திருக்கிறது.

நரேன் தற்போது “ஒத்தைக்கு ஒத்த” என்ற படத்தில் மட்டுமே நடித்து வரும் நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் “யு-டர்ன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவரோடு நடிகை பூமிகாவும் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பவன் குமார் இயக்குகிறார். ஆதி, ராகுல் ரவீந்திரன் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது.