பாலிவுட்டில் மில்லியன் டாலர் பேபி

News

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமூக அக்கறை கொண்ட படமாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். கிளையண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி ஹாலிவுட்டில் ஹிட்டடித்த `மில்லியன் டாலர் பேபி’ படத்தை இந்தியில் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறாராம்.

இதில் கிளையண்ட் ஈஸ்ட்வுட் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், ஹிலாரி ஸ்வாங்க் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் மரினா கவுரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அக்சய் குமாரை வைத்து துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்தை முடித்த பிறகு அக்‌ஷய் குமாரை வைத்து இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.