மகாசேனா – திரைவிமர்சனம் 

cinema news movie review

        மகாசேனா – திரைவிமர்சனம் 

நடிகர்கள்:விமல்,ஸ்ருஷ்டிடாங்கே, யோகிபாபு, ஜான் விஜய்,கபீர் துஹான் சிங்,மற்றும் பலர்.

இசை:A.பிரவீன் குமார்,

ஒளிப்பதிவாளர் :மனாஸ் பாபு,

இயக்கம்:தினேஷ் கலைச்செல்வன்,

ஊரின் முக்கியத் தலைக்கட்டு செங்குட்டுவன். அவர்தான் விமல். மனைவி ஸ்ருஷ்டிடாங்கே மற்றும் ஒரு மகளோடு வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் காட்டுக்குள் வாழும் ஒரு இனக்குழு விமல் ஊரைச் சேர்ந்தவர்களை கொன்றுவிடத் துடிக்கிறது. மேலும் விமல் ஊரிலுள்ள ஒரு சாமிசிலையை அபகரிக்கவும் முயற்சிக்கிறார்கள். அதோடு காட்டுக்குள் ட்ரக்கிங் வரும் ஒரு காலேஜ் டீம், அவர்களை வைத்து நகரும் கிளைக் கதை என படம் பல்வேறு கோணங்களில் போகிறது. ஒருவழியாக விமல் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கும் குரங்கனி திருவிழாவில் சாமி சிலையை திருட பாரஸ்ட் ஆபிசரான ஜான் விஜய் ஒரு ப்ளான் போடுகிறார். அந்தப் ப்ளானுக்குப் பின்னால் மெயின் வில்லன் கபீர் துஹான் சிங் இருக்கிறார். அவர்களின் ப்ளான் சக்சஸ் ஆச்சா? என்பதும் இரண்டு இனக்குழுவிற்கான சண்டை எப்படி முடிந்தது? என்பதும் தான் படத்தின் கதை

கதாநாயகன் விமல் முன்பாதியில் சிறப்புத் தோற்றத்தில் வரும் நடிகர் போலவே வந்து போகிறார். அவர் கேரக்டருக்கான கம்பீரத்தை அவர் முழுமையாக வழங்கவில்லை என்பது வருத்தம் நிறைந்த நிஜம். ஸ்ருஷ்டிடாங்கே கிராமத்துப்பெண் கேரக்டரில் சரியாகப் பொருந்தாவிட்டாலும் ஓரளவு கொடுத்த வேலையைச் செய்துள்ளார். மஹிமா குப்தா மிரட்டலாக நடிக்க முயற்சித்துள்ளார். ஜான் விஜய், யோகிபாபு ஆகியோர் சின்னதாக அட்டனென்ஸ் போடுகிறார்கள்

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு DR காடு சார்ந்த லொக்கேசன்கள் என்பதால் நல்ல நல்ல ஷாட்களை எடுத்துள்ளார். சில இடங்களில் சிறப்பாக உள்ளது கண்டினியூட்டி ஷாட்களிலும் A.பிரவீன் குமார் இசையில் லாஸ்டில் வரும் சாமி பாடல் அசத்தலாக இருந்தது. உதய் பிரகாஷ் U.P.R பின்னணி இசையை சில இடங்களில் பட்டாசாக அமைத்துள்ளார் . சில இடங்களில் . எடிட்டர் நாகூரான் தேவையற்ற சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்

நிறைய நல்ல மொமெண்ட்ஸ்களையாவது படத்தில் அமைத்திருக்கலாம். அப்படி அமைத்திருந்தால் கூட மகாசேனா கம்பீர் நடை போட்டிருக்கும்