குபேரா –  – திரை விமர்சனம் – 

cinema news movie review

குபேரா –  – திரை விமர்சனம் 

நடிகர்கள் :தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா,பாக்கியராஜ்

இசை:தேவி ஸ்ரீ பிரசாத்

இயக்கும்: சேகர் கம்முலா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே மற்றும் பாக்கியராஜ் நடித்துள்ள குபேரா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தியேட்டர் ஆடியன்ஸுக்கும் இந்த படம் பெரியளவில் கனெக்ட் ஆகும் என்றே தெரிகிறது.

பிச்சைக்காரர்களை பினாமியாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மணி லாண்டரிங் செய்யும் கதையில் முக்கிய வில்லனாக நடித்துள்ள ஜிம் சர்ப் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அதே சமயம் படத்தின் கிளைமேக்ஸில் சில சறுக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. தனுஷின் குபேரா படத்தின் பிளஸ், மைனஸ் உள்ளிட்டவை அடங்கிய முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க.. குபேரா கதை: மிகப்பெரிய தொழிலதிபராக வரும் நீரஜ் முதல் காட்சியிலேயே இந்தியாவுக்கு எண்ணெய் வளம் கிடைப்பதை தெரிந்துக் கொள்கிறார். அதை மக்களுக்கு தெரிவிக்காத வகையில், அரசியல் தலைவரான ஹரிஷ் பெரடியுடன் கூட்டு சதி செய்து, கொள்ளையடிக்கிறார். அதற்காக அரசியல் தலைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பெரிய தொகையை சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தீபக் (நாகார்ஜுனா) மூலம் கொடுக்க திட்டம் போடுகிறார். தீபக் பினாமிகளாக பிச்சைக்காரர்களை வைத்து இந்த டீலை முடித்துக் கொடுக்கிறேன் என வர, திருப்பதியில் இருந்து தேவா (தனுஷ்), மற்ற ஊர்களில் இருந்து குஷ்பு, திவ்யா மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தனுஷூக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோல் என்று சொல்லலாம். ஏற்கனவே பல படங்களில் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்துள்ள தனுஷ், இந்த படத்திலும் அதை மீண்டும் செய்திருக்கிறார். தேசிய விருது கொடுக்கும் அளவுக்கான நடிப்பை அசால்ட்டாக நடித்துக் காட்டி பல இடங்களில் ரசிகர்களை கை தட்டவும் விசில் அடிக்கவும் செய்கிறார். பிச்சைக்காரனாக இருந்தாலும், நாங்களும் இந்த உலகத்தின் மனிதர்கள் தானே என்றும் இறந்தவர்களை நாய் வண்டியில் ஏற்றாதீர்கள், கட்டை வைத்து எரித்தால் தான் மீண்டும் பிச்சைக்காரனாக பிறக்க மாட்டார்கள் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் கண் கலங்க வைத்து விடுகிறார்.

படம் தொடங்கியதும் மைய கதைக்குள் செல்வது சிறப்பாக உள்ளது. ஜிம் சர்ப் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் அவருடைய இலக்கு என்ன என்பதையும் விளக்கிவிடுகிறார் இயக்குநர். அதன் பின்னர், பொய்யான லஞ்ச குற்றச்சாட்டுக்காக சிறையில் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் நாகார்ஜுனாவை தனது வேலைக்காக அவர் பயன்படுத்தும் விதம், மனைவி சுனைனா மற்றும் மகளுக்காக இந்த தப்பான வேலையை தேர்வு செய்து நாகார்ஜுனா பயணிக்கும் விதம், நாகார்ஜுனாவிடம் இருந்து தப்பிக்கும் தனுஷை அவர் துரத்த எடுக்கும் நடவடிக்கைகள், கடைசியில் தனுஷ் பக்கம் நிற்க அவர் போராடுவது என மனுஷன் மாஸ் கிங்காக எல்லாம் நடிக்காமல், நடிப்பு கிங்காக படம் முழுக்க பயணித்துள்ளார்.

படத்தின் மேக்கிங் தரம் ரொம்பவே புரொடக்‌ஷன் வேல்யூவை கண்ணுக்கு முன்பு கொண்டு வந்து நிறுத்துகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். குப்பைத் தொட்ட்டி காட்சிகளில் நிக்கெத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு வேறலெவல். அண்டர்வாட்டர் காட்சிகள் என அனைத்து இடத்திலும் தத்ரூபமாக ரசிகர்களை அந்த இடத்துக்கே கொண்டு சென்ற விதம் அருமை. காதலன் ஏமாற்றிவிட சாக முடிவெடுக்கும் ராஷ்மிகாவை தனுஷ் காப்பாற்ற அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்படும் எமோஷனல் கனெக்ட்டை யானையை வைத்து சொன்ன விதம் அருமை. ஆரம்பத்தில் இருந்தே படம் யதார்த்தத்துடன் நகர்ந்த விதம் தான் படத்தை பார்க்க தூண்டியது. “போய் வா நண்பா” பாடல் இடம்பெற்ற இடமும் தனுஷின் ஆட்டமும் சரவெடி.