full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

கள்வன் – திரைவிமர்சனம் Rank 3.5/5

கள்வன் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் படத்தின் ட்ரைலர் போஸ்டர்ஸ் அதோடு ஜி.வி.பிரகாஷ் எதிர்ப்பார்ப்பு தான் காரணம்,அதோடு தமிழ் சினிமா செந்திமென்ட் யானை வேறு உள்ளது. சரி இந்த படம் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்

ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பி வி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் கள்வன்.

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் நடக்கும் கதையாக அமைத்து இருக்கிறார் இயக்குனர். ஜி வி பிரகாஷ் மற்றும் தீனா இருவரும் நண்பர்கள். அந்த கிராமத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

பக்கத்து கிராமத்து பெண்ணான இவானாவை கண்டதும் காதல் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். திருடனான ஜி வி பிரகாஷை வெறுக்கிறார் இவானா.

இந்நிலையில், முதியோர் இல்லத்தில் வேலைக்காக செல்லும் ஜி வி பிரகாஷ், அங்கு பாரதிராஜாவை சந்திக்கிறார். யாரும் இல்லா அனாதையாக இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுத்துக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ்..

பாரதிராஜாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஜி வி பிரகாஷ், மிகப்பெரும் திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டம் நிறைவேறியதா? இவானாவை காதல் கரம் பிடித்தாரா.? பாரதிராஜா படத்தில் யார்.??? என்பதற்கெல்லாம் விடையை மிகவும் சுவாரசியமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

நாயகன் ஜி வி பிரகாஷ், தன்னை மெருகேற்றி வருகிறார்.கதைக்கேற்ற கள்ளன் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.பொதுவாக கொஞ்சம் அடால்புதால் என்று வரும் ஜி.வி.இந்த படத்தில் மெளனமான ஒரு முகத்தைக் கொண்டு, படம் முழுவதும் கெம்பன் கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஜி வி பிரகாஷின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.

இவானாவின் தனக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார். இவனா கொஞ்சம் உங்க ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள்

வழவழவென பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் தான் தீனாவோடது. படத்திலும் சில இடங்களில் விஜய் டிவியில் பேசுவதுபோல நடித்து இருக்கிறார் .ஒரு சில இடங்களில் ஓகேவாக கடந்து சென்றாலும், ஒரு சில இடங்களில் எரிச்சலடைய வைத்து விடுகிறார் தீனா.

படத்தின் மொத்த பாரத்தை பாரதிராஜா தாங்கி பிடித்துள்ளார். படத்தின் மையக்கருவை தாங்கும் தூணாக நிற்கிறார் .

திரைக்கதையில் ஒரு நல்ல விறுவிறுப்பை கொடுத்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர் இருந்து படம் நல்ல சுவாரசியமாக கொடுத்து இருப்பதற்கு பாராட்ட வேண்டும்.

ரெவாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக நிற்கிறது. இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருந்ததால், தன்மை அறிந்து காட்சிகளை படமாக்கி இருப்பது அழகு.அதேபோல ஒவ்வொரு காட்சிக்கும் நன்றாகவே மெனக்கெடல் செய்திருக்கிறார்.

கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் சென்று படத்தை ரசிக்கலாம்.

கள்வன் நம் மனதை கொள்ளை கொள்கிறான்