கடாரம் கொண்டான்; விமர்சனம் 3.50/5

Movie Reviews

விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் தான் ‘கடாரம் கொண்டான்’. ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கதை:

மலேசியாவில், சாலை விபத்தில் விக்ரம் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவமனையில் விக்ரமை கொல்ல சதி நடக்க, அதை தடுக்கிறார் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர் அபி ஹாசன்.

9 மாத கர்ப்பினி மனைவி அனுஹாசனுடன் வசித்து வருகிறார் அபி ஹாசன்.

அனுஹாசனை கடத்தி வைத்து, விக்ரமை மருத்துவமனைக்கு வெளியே கொண்டு வர வேண்டும் என்று அபிஹாசனிடம் மிரட்டல் விடுக்கப்படுகிறது…

இதனால் வேறுவழியின்றி விக்ரமை மருத்துவமனையிலிருந்து அழைத்துக்கொண்டு நாயகியை மீட்பதற்காக செல்கிறார் அபி ஹசன். இதனால் அபி ஹசனும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கப்படுகிறார். விக்ரம் யார்? அவரை கொல்ல முயற்சிப்பது யார்? அபி ஹசனும், அக்‌ஷராவும் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை
படம் முழுக்க விக்ரம் வசனங்கள் ஏதும் பேசாமல் சைலண்டாக பேசி, பார்வையிலேயே வைலண்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விக்ரம். வித்தியாசமான கெட்டப், லுக் என படம் முழுக்க ஸ்டைலிஷாக இருக்கிறார் விக்ரம். விக்ரம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும்.

ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டியிருக்கிறார் விக்ரம். அதிலும் அந்த கெட்-அப் செம..

மேலும், கமலஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் மற்றும் நாசரின் மகன் அபி ஹாசன் இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

முதல் படம் என்றாலும் அபிஹாசன் நல்ல ஸ்கோர் செய்துள்ளார். மேலும், படத்தில் போலீஸாக வரும அனைவரும் கதாபாத்திரத்தை நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீநிவாஸ் ஆர் குதா-வின் ஒளிப்பதிவு மலேசியாவை மிகவும் கலர்புல்லாக காட்டியுள்ளது. மேலும், விக்ரமின் ஆக்‌ஷன் காட்சிகளில் கேமராவின் வேலைகள் பாராட்டுக்குறியது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட், மேலும் பின்னனி இசை மிரட்டலோ மிரட்டல். அதிலும், தீம் இசை ரசிகர்களை விசில் அடிக்க வைக்கிறது. .

ப்ரவீன் கே எல் அவர்களின் எடிட்டிங் ஷார்ப்..

ஏற்கனவே, பல படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், அதை எடுத்த விதத்தில் இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். வேறு எந்த படத்திலும் மலேசியாவை இவ்வளவு அழகாக காட்டியதில்லை.