full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்

சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்

அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்சங்கர் தெருவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சாய் சஹஸ்ரநாமம்’ புத்தகத்தின் தெலுங்கு பதிப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

ஸ்ரீ ஷீரடி சாய் சேவா சமாஜ் தலைவர் பி ஸ்ரீநிவாஸ் இப்புத்தகத்தை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தின் பிரதிகளை ஆளுநரிடம் இருந்து அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் டாக்டர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புத்தகத்தை சிறப்பாக மொழிபெயர்த்த ஆசிரியர் ஸ்ரீநிவாஸை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். பயனாளிகளுக்கு கல்வி உதவிகளையும் அவர் வழங்கினார்.

ஸ்ரீ ஷீரடி சாய் சேவா சமாஜ் செயலாளர் எஸ் ஶ்ரீநிவாசன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூலின் ஆசிரியர் பி ஸ்ரீநிவாஸ் நன்றி கூறினார். அகில பாரத சாய் சேவா சமாஜ் முன்னாள் செயலாளர் எஸ் சேஷாத்ரி, சமூக சேவகர் சி கோபாலன் ஆகியோர் பேசினர். ரத்தினம் ராஜகோபாலன் நன்றியுரையாற்றினார்.

***

*Jharkhand Governor Sri C P Radhakrishnan releases ‘Sai Sahasranamam’ Telugu book in Chennai*

Amudha Surabhi Editor Tirupur Krishnan, Harijan Sevak Sangh Tamil Nadu State President Pidikiti Maruthi and Filmmaker Vasanth S Sai receive the devotional book

Jharkhand Governor Sri C P Radhakrishnan released the Telugu version of ‘Sai Sahasranamam’ book at a function held in Sai Baba temple, Jaishankar Street at West Mambalam in Chennai.

The book was translated in Telugu by P Srinivas, President, Shri Shirdi Sai Seva Samaj. Copies of the book were received from the Governor by Amudha Surabhi Editor Tirupur Dr Krishnan, Harijan Sevak Sangh Tamil Nadu State President Pidikiti Maruthi and Filmmaker Vasanth S Sai.

Jharkhand Governor Sri C P Radhakrishnan lauded the author for translating the book. He also presented educational assistance to beneficiaries on the occasion.

Shri Shirdi Sai Seva Samaj Secretary S Srinivasan rendered the welcome address. Author of the book P Srinivas thanked everyone who attended the event. Former Secretary of All India Sai Seva Samaj S Seshadri and philanthropist C Gopalan spoke on the occasion. Ratnam Raja Gopalan delivered vote of thanks.

***