ஜனநாயகன் திரைவிமர்சனம் 

cinema news movie review

ஜனநாயகன் திரைவிமர்சனம்

 

நடிகர்கள் :விஜய், பூஜா ஹெக்டே, நமிதா பைஜி, ரேவதி, கௌதம் வாசுதேவ் மேனன்,பிரகாஷ்ராஜ்,சுனில், பாபி தியோல், நரேன்,பிரியாமணி, மற்றும் பலர்.

இசை : அனிருத்,

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்,

இயக்கம் : எச்.வினோத்,

தயாரிப்பு : வெங்கட் கே. நாராயணா.

கதநாயகன்.  சிறையில் தண்டனை கைதியாக இருக்கிறார்,உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க போலியான ஜெயில் கலவரத்தை நடத்த திட்டம் தீட்டுகிறார்கள். நாயகன் அதை முறியடிக்கிறான். இதனால் ஜெயில் அதிகாரிக்கு நாயகன் மேல் நல் எண்ணம் ஏற்படுகிறது.நாயகனின் அம்மா மரணப்படுக்கையில் இருக்கிறார். கடைசி ஆசையாக நாயகனைப் பார்க்க விரும்புகிறார். சட்டத்தை மீறி அந்த ஜெயில் அதிகாரி நாயகனை பரோலில் அனுப்புகிறார். இதனால் அந்த அதிகாரிக்கு பணி மாற்றம் செய்யப்படுகிறார், ஜெயில் அதிகாரியின் மகளுடன் நாயகனுக்கு ஒரு நல்ல உறவு உருவாகிறது.ஒரு விபத்தில் அந்த ஜெயில் அதிகாரி இறந்து விட, நாயகன் அவரது மகளைத்தன் வளர்ப்பு மகளாக வளர்க்கிறான்.

 

நாயகன் எந்தக் கொலைக் குற்றத்திற்கு சிறை தண்டனை பெற்றானோ கொலை செய்யப்பட்டதாக நினைத்த ஆள் உயிருடன் இருப்பதை அறிகிறான். நாயகனுக்கும், வில்லனுக்கும் உண்டான பிளாஷ்பேக் என்ன? வில்லனின் புதிய திட்டம் என்ன? நாயகன் அதை முறியடித்தானா? என்பதை மீதித் திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக முதல்வர் விஜய். புதிய ஹேர் ஸ்டைல், பக்குவப்பட்ட நடிப்புடன் கலக்குகிறார். குறைவான காட்சியில் காவல் அதிகாரியாக வந்தாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார்  சண்டைக் காட்சிகளில்   ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. அவர் பேசும் அரசியல் பஞ்ச் வசனங்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ‘தளபதி கச்சேரி’ பாட்டில் முதல்வர் விஜயின் டான்ஸ் கலக்கல் ரகம்.

நாயகியாக பூஜா ஹெக்டே படம் முழுக்க ஸ்லீவ்லெஸ் பிளவுசுடன் கிளாமராக வருகிறார். ஆனால் டூயட் எதுவும் இல்லை. அவர்களின் பங்கு சிறப்பு.

நாயகனின் வளர்ப்பு மகளாக மமிதா பைஜூ கொஞ்சிப் பேசும் சிரிப்பு, குறும்பு கொப்புளிக்கும் கன்னம், சித்தா என நாயகனை அழைப்பது அனைத்தும் அழகு (சித்தப்பா என்பதன் சுருக்கம் தான் சித்தா)

ஜெயில் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் காட்டும் கம்பீரம் கனகச்சிதம். ஆங்கிலம் அதிகம் பேசாமல் நார்மல் தமிழ் பேசுவது சிறப்பு.

வில்லனாக பாபி தியோல் மிரட்டி இருக்கிறார். அவரது ஜிம் பாடி அருமை. போலீஸ் ஆபீசராக வரும்போது அவமானப்படும் காட்சியில் அருமையான நடிப்பு.

ஐஏஎஸ் ஆபீசராக பிரியாமணி கெஸ்ட் ரோலில் வருகிறார்.

நேர்மையான ஆபீசராக நரேன், முதல்வராக நாசர், அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ், நாயகனின் அம்மாவாக ரேவதி, போலீஸ் ஆபீசராக நிழல்கள் ரவி என அனைவரது நடிப்பும் கிளாஸ்.

அனிரூத் இசையில் 5 பாடல்கள் அனைத்தும் இனிமை. ‘தளபதி கச்சேரி’ பாட்டுக்கு தியேட்டரே ரசிகர்களின் கொண்டாட்டம் அந்தப் பாட்டுக்கு நடன வடிவமைப்பும் அருமை. அனிரூத்தும் ஒரு சீனில் வந்து போகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டம். சண்டைக் காட்சி , க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படம் பிடித்ததில் தரம் தெரிகிறது.

பகவந்த்கேசரி தெலுங்குப் படத்தின் கதையை வாங்கி ஹெச்.வினோத் திரைக்கதை அமைத்திருக்கிறார். சதுரங்க வேட்டை படத்துக்குப்பின் வசனத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்த படமாக இது அமைகிறது.

நாயகனுக்கும், வளர்ப்பு மகளுக்குமான உறவு  அருமை.

வில்லன்களாக வரும் பிரகாஷ் ராஜ், பாபிதியோல் இருவரது நடிப்பு நம்மை மிரட்டுகிறார்கள்.

மொத்தத்தில் ஜனநாயகன் ஜனத்தை கவர்ந்த நாயகன்.