full screen background image
Search
Wednesday 8 May 2024
  • :
  • :
Latest Update

டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா அவர்களுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம்

டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா அவர்களுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம்

கிழக்காசிய நாடுகளில் வளர்ச்சியடைந்த மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவரும் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான “டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா அவர்கள் தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னேறியவர். அங்கு முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார். பல்வேறு துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகிறார். தற்போது மலேசிய வேளாண்மை மற்றும் உணவுத்துறையின் (AGRO MALAYSIA) தலைவராகவும் உள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சினிமா துறையிலும் தடம் பதித்து சாதித்து வருகிறார். ‘DSG CREATIONS’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் கோலிவுட்டில் படத் தயாரிப்பு, பட வெளியீடு,சந்தைப் படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக 2023-ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் S.J.சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் ‘தங்கராஜ் The Gold’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இந்நிலையில் அவருக்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலக வங்கியின் பன்னாட்டு நிதிக்கான கூட்டு நிதியம் மற்றும் தனியார் திட்ட நிதிக் குழு தலைமை அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் “டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜாவை மலேசியாவில் தொடர்பு கொண்டு உரையாடி, பின்னர் கேபிடல் ஒன்(Capital One) ஆலோசனைக் குழுமத்தின் தலைவராக நியமித்தார்கள். இது அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் இயங்கி வரும் உலக வங்கி – பன்னாட்டு நிதிக்கான கூட்டு நிதியத்தின் அதிகாரிகள் அளித்த கௌரவ பொறுப்பாகும். இது அவரது பொதுவாழ்க்கையில் முக்கியமான அங்கீகாரம் ஆகும். இது அவரது வாழ்கை எனும் மணிமகுடத்தில் வைரமாக இருக்கும்.

நடிகரின் புதுவிதமான கூட்டணியுடன் கூடிய தமிழ்ப் படங்கள் மற்றும் அதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.