full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

இமான் 100!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் நிச்சயம் இவருக்கு இடமுண்டு. பெரிய பட்ஜெட் படமோ, சிறு பட்ஜெட் படமோ
இவரது பாடல்கள் படத்திற்கு வேறு அந்தஸ்த்தை தரும். அதே போல பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற பாகுபாடில்லாமல் இவரது இசை ஒலிக்கும்.

குறுகிய காலத்தில் அதிக அளவிலான புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரையேச் சாரும். 15 ஆண்டுகள் என்ற
அசாதாரணாமான இசைப் பயணத்தில் 100 படங்களுக்கு இசையமைப்பது என்பது எளிதான காரியமில்லை.

அறிமுகமான தினத்திலிருந்து இன்று வரை எந்த விதமான எதிர்மறை விமர்சனங்களும் சந்திக்காமல், எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தன்னை
அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செலவதில் மட்டுமே கவனம் செலுத்தியவர். அவர் வேறு யாருமல்ல இசையமைப்பாளர் டி.இமான் தான்.
2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த பதினைந்து ஆண்டுகளில் எந்த வகையான ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அற்புதமான பயணம் இவருடையது. இசையைத் தவிர
வேறு எதிலுமே கவனம் செலுத்தாமல் இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கிறார். மெலடியா?, குத்துப்பாடலா? எதிலுமே தனித்து நிற்கக் கூடிய ஒலி வடிவத்தை அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு வரையிலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் பயணித்தவரை, அப்படியே வேரொறு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றது “மைனா” திரைப்படம் தான். அதுவரை பாடல்களுக்காக மட்டுமே அறியப்பட்டிருந்த இமான், முதல் முறையாக பின்னணி இசையின் மூலம் தன்னை இந்த உலகத்திற்கு அடையாளப் படுத்திக் கொண்டார் மைனா படத்தின் மூலம்.

அதிலிருந்து அவரது இசையின் வடிவம் வேறாக மாறி “மாஸ்+கிளாஸ்” என சமமாக பயணித்து அடுத்தடுத்த வெற்றிகளை இமானுக்குத் தந்தது.          “டிக் டிக் டிக்” இமானுக்கு நூறாவது படம்.

இந்த மகிழ்வான தருணத்தை பத்திரிக்கையாளர்களுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் போது மிகவும் நெகிழ்ச்சியாக காணப்பட்டார். அவருடைய 4 வயதிலிருந்து இன்று அவருடன் பயணிக்கும் அத்தனை பேருக்கும் ஒருவரையும் விடாமல் அவர் நன்றி சொன்ன பாங்கும், பொறுமையும் நிச்சயமாய்ப் பாராட்டக் கூடியது.

“நான் 100 படங்களுக்கு இசையமைத்தவன்” என்ற எந்த மமதையும் இல்லாமல் இருக்கிற இமான் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து, பல விருதுகளைக் குவிப்பார் நிச்சயமாக!