ஐ அம் கேம் திரைவிமர்சனம்
நடிகர்கள் : துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஸ்கின், ஆண்டனி வர்கீஸ், கதிர், மற்றும் பலர்.
இசை :ஜேக்ஸ் பிஜாய்,
ஒளிப்பதிவு :ஜிம்ஷி காலித்,
இயக்கம் :நஹாஸ் ஹிதாயத்,

கதாநாயகன் துல்கர் சல்மான் ஒரு வசதியான மகனாக வாழ்ந்து வருகிறார் அவருக்கும் ஆடம்பரமான சூதாட்ட பொழுதுபோக்காக விளையாடி ஆர்வம் உடையவராக இருக்கிறார் அப்படி ஒரு நாள் அவர் பெரிய கடன் சுமைக்கு ஆளாகிறார் தன் அம்மாவிடம் பெறப்பட்ட ஒரு பெரும் தொகையை வைத்து எப்படியாவது கடனை அடைத்து விட வேண்டும் என்று மேட்ச் ஃபிக்ஸ் என்ற அவர் விளையாடுகிறார் மொத்த பணத்தை கட்டிவிட்டு எதிர்பாராத விதமாக மொத்தம் தோற்றுவித்து அங்கிருந்து அந்த தோல்வி ஏற்க முடியாமல் தான் செலுத்திய தொகையை திரும்ப வேண்டும் என்று தகராறு ஈடுபட்டு வீட்டிற்கு திரும்புகிறார் எதிர்பாராத விதமாக வழியில் அவருக்கு விபத்து ஏற்பட்டு தன் வலது கையை இழக்க நேரிடுகிறது பின்னர் உறுப்பு தானம் செய்பவர் மூலமாக ஒருவரும் கையை இவருக்கு பொருத்தப்படுகிறது ஆனால் அந்த கையோ அவருடைய கட்டுப்பாட்டு இல்லாமல் செயல்படுகிறது கதையின் அங்க தான் ஆரம்பிக்கிறது நல்ல ஒரு பொழுதுபோக்கான திரில்லர் படமாக அமைகிறது மற்றொரு நாயகன் கிரிக்கெட் வீரராக கதாபாத்திரத்தில் இருக்கிறார் வில்லன் சதித்திட்டத்தால் அவரை கொல்லப்படுகிறார் பிறகு அந்த வில்லனை பழி வாங்க துடிக்கிறார் சுவாரஸ்யமான திரைப்படமாக அமைந்துள்ளது இறுதியில் பழி வாங்கினாரா எப்படி வாங்கினார் என்பதுதான் மீதி கதை .
படத்தின் முதல் பாதி உண்மையிலேயே ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக சூதாட்ட உலகத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட காட்சிகள், அதன் பின்னணி, கதாபாத்திரங்களின் மர்மமான நகர்வு, அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு என படம் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்களை தனது உலகத்திற்குள் இழுத்துச் செல்கிறது.
நஹாஸ் ஹிதாயத், தனது முந்தைய படமான RDX மூலம் ஒரு கமர்ஷியல் இயக்குநராக தன்னை நிரூபித்தவர். ஆனால், I’m Game படத்தின் முதல் பாதியில் அவர் இன்னும் பெரிய அளவில் சிந்தித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. காட்சிகளின் வடிவமைப்பு, ஒளிப்பதிவு, தயாரிப்பு தரம், கதையின் நகர்வு என பல அம்சங்களில் படம் சர்வதேச தரத்திலான ஒரு கிரைம்-த்ரில்லர் திரைப்படத்தை நினைவூட்டுகிறது.
தூக்கர் சல்மான் படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம் அவர் நடிப்பு உணர்ச்சி பூர்வமாக வெளிப்பாட்டில் அற்புதத்தின் அற்புதமாகவே நடித்துள்ளார் குறிப்பாக தன் கை செயல்பாட்டில் இல்லாமல் அந்த நடிப்பு மிகச் சிறப்பு தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார்.உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும், பதற்றமான காட்சிகளிலும் துல்கரின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது. தனது உடல் மொழி மற்றும் கண்களின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை இந்தப் படத்தில் மீண்டும் ஒருமுறை வெளிப்படுகிறது.
படத்தில் கயாடு லோஹரின் நடிப்பும் கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. வெறும் அழகுக்காக அல்லது கதாநாயகனின் காதல் ஜோடியாக மட்டுமே அவரது கதாபாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. கிடைக்கும் காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் அவர் ரசிக்க வைக்கிறார்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது ஆங்காங்கே ரசிக்கும்படியாகவே அமைந்துள்ளது.
ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் உலகத்தை மிகச் சிறப்பாக உருவாக்குகிறது. நியான் விளக்குகள், ஆடம்பரமான சூதாட்ட அரங்குகள், இருண்ட பின்னணிகள் என ஒவ்வொரு ஃப்ரேமும் படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குகின்றன.
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் உருவாக்கியிருக்கும் உலகம் புதுமையாகவும், விறுவிறுப்பாகவும், சர்வதேச தரத்திலான ஒரு த்ரில்லர் அனுபவமாகவும் இருக்கிறது. ஆனால் அந்தப் புதிய தன்மையை இரண்டாம் பாதியில் தொடராமல், ஏற்கனவே தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்த பழிவாங்கும் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட கதை வடிவத்திற்குள் படம் சென்றுவிடுகிறது.
மொத்தத்தில் இந்த ஐ அம் கேம் நல்ல ஒரு பொழுதுபோக்கான படமாகவே அமைந்திருக்கிறது வழக்கம்போல் திரைக்கதை இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையுடன் ரசிகர்களை வியக்க வைக்க படமாகவே இருக்கும்.
