full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம்

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம்

ஹாட் ஸ்பாட் நான்கு கதைகைளை ஒரே படமாக சொல்லி இருக்கும் படம் இது நான்கும் வித்தியாசமான கவித்துவமான கதைகள் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே இரண்டு படங்கள் “திட்டம் இரண்டு”, அடியே உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்த படம் தான் இந்த “ஹாட் ஸ்பாட்”.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியது. தொடர்ந்து இப்படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே அதிகமாகவே எழுந்தது.

இப்படத்தில், கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினை இவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

இசையை சதீஷ் ரகுநந்தன் கவனித்திருக்கிறார்.

கதைக்குள் சென்று விடலாம்,

Happy married life, Golden Rules, Thakkali chutney, Fame என்னும் நான்கு பகுதிகளாக நான்கு கதைகளுடன் நகர்கிறது இந்த “ஹாட் ஸ்பாட்”.

முதல் கதையில்,

ஆணுக்கு பெண் தாலி கட்டுவதும், மாமனார் வீட்டிற்கு மருமகன் திருமணமாகி குடியேறுவதுமாய் கதை நகர்கிறது. இப்படியான வாழ்க்கை சமூகத்திற்கு என்ன சொல்ல வந்தது என்பதே படத்தின் மீதிக் கதை

இரண்டாவது கதையில்,

காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்ய முடிவெடுக்கிறது. அதற்காக பெண் தனது வீட்டில் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்குகிறார்.

ஆண், தன் வீட்டிற்கு தனது காதலியை அழைத்துச் சென்று, அவரது பெற்றோரிடம் பேச வைத்து சம்மதம் வாங்க முயற்சி செய்கிறார்.

அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தால், காதல் ஜோடி பிரிகிறது. இந்த பிரிதலுக்கு யார் பொறுப்பேற்பது என்பதே இந்த படத்தின் கதை.

மூன்றாவது கதையில்,

இங்கும் ஒரு காதல் ஜோடி. ஆண் மென்பொருள் அலுவலகத்திலும் பெண் பத்திரிகையாளராகவும் இருக்கிறார்.

காதலனுக்கு வேலை பறிபோகிறது. வேறுவழியின்றி, கிடைத்த ஒரு தொடர்பு மூலம் ஆண் விபச்சார தொழிலில் இறங்குகிறார். வசதி படைத்த பெண்களுடன் சென்று நன்றாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்.

இந்த விஷயம் காதலிக்கு தெரிய வரும் போது, தான் செய்வது ஒரு தொழில் என்றும் காதல் என்பது வேறு என்றும் தனது நிலைப்பாட்டை கூறுகிறார்.

அதன்பிறகு காதலி ஒரு விபரீத முடிவை கூறுகிறார் காதலனிடம்.. அதன்பிறகு என்ன நடந்தது என்பது இந்த கதையின் மீதிக் கதை.

நான்காவது கதையில்,

ஏழ்மையான குடும்பத்தில் இருக்கும் 6 வயது சிறுமி, தனது நடிப்பு திறமையால் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு தேர்வாகிறார்.

தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் அந்த சிறுமி. இதனால், பெமிலியர் ஆகிறார் அந்த சிறுமி. வருமானமும் பெருக, ஏழ்மையான குடும்பம் அடுத்த கட்டத்தை எட்டுகிறது.

இந்நிலையில், அச்சிறுமி இறந்துவிட, சிறுமியின் இறப்பு அம்மா தான் காரணம் என்று கூறுகிறார். எதற்காக அப்படி கூறினார் என்பதே இக்கதையின் மீதிக் கதை.

இந்த நான்கு கதைகளிலுமே மிக தேர்ந்த நடிகர், நடிகைகளையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். நடித்த நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்தின் வலுவை உணர்ந்து உணர்வுப்பூர்வமான் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர்.

சம காலத்தில் நடந்த, நடக்கின்ற தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி, யாரை பழி சொல்வது என்ற கேள்வியை ஒவ்வொருவரின் மீதும் வைத்து முடித்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு சில மருந்துகளை தேன் தடவிதான் கொடுக்க வேண்டும். அதுபோல், ஒரு சில கருத்துகளை மக்கள் மத்தியில், அவர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் சில வசனங்களை இப்படிதான் கொடுத்தாக வேண்டும் என்று தன் கருத்தில் உறுதியாக இருந்து அதில் வென்றும் காட்டியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்த வருடத்திற்கான டாப் 10 படங்களில் இப்படம் ஒரு முக்கிய இடத்தில் அங்கம் வகிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பக்கபலமாக இருந்துள்ளது.

மொத்தத்தில், நம் மனதுக்கு இதமான ஹாட்

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம