கமலை வரவேற்கும் கெளதமி

News

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எவர்கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், லைப் அகேய்ன் புற்றுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவை சார்பில் பொதுநல மருத்துவ முகாம் இன்று நாமக்கல்லில் நடந்தது.

இந்த முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய நடிகை கெளதமி, “புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இந்த அமைப்போடு இணைந்து இன்று மருத்துவ முகாம் நாமக்கல்லில் இன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

அவரிடம், கமலின் அரசியல் வருகை குறித்து கேட்ட போது, “இந்த தலைமுறைக்கு அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ? அவர்களுக்கு நான் உள்பட அனைவரும் ஆதரவாக இருப்போம். அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.” என்றார்.