full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியிட்ட போர்ப்ஸ்

போர்ப்ஸ் பத்திரிகை 2018-ஆம் ஆண்டின் உலகின் கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் உலகின் முதல் செல்வந்தராக உள்ளார். இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை கூறி உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 72.84 சதவீதம் உயர்ந்து 40.1 பில்லியன் அமெரிக்க டாலராக (2,60,622 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. 11-வது ஆண்டிற்கான மிகப்பெரிய இந்திய பணக்காரராக உள்ளார்.

உலக அளவில் 2017-ஆம் ஆண்டில் 33-வது இடத்தில் இருந்த அம்பானி 19- வது இடத்திற்கு உயர்ந்து உள்ளார். இந்த பட்டியலில் 121 இந்தியர்கள் உள்ளனர். கடந்த வருடம் இந்த பட்டியலில் 102 பேர் இருந்தனர்.

அமெரிக்கர்கள் 585 பணக்காரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். சீனர்கள் 373 பேர் இடம் பெற்று உள்ளனர்.

பே டீம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா 39, இளைய இந்திய பணக்காரர் ஆவார். 92 வயதான சம்பிரதா சிங் மிகவும் வயதான பணக்காரராக போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்று உள்ளார்.

ஜெப் பெஸோஸ் இணையதள வணிக நிறுவனமான அமேசானின் பங்குகள் 12 மாதங்களில் 59 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. ஒரே வருடத்தில் அது 39. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து உள்ளது. அவரது சொத்து மதிப்பு 112 பில்லியன் அமெரிக்க டாலராகும். 1987 ஆம் ஆண்டில் இருந்து போர்ப்ஸ் கோடீசுவரர்களை கண்காணிக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரு வருடத்தில் இது அதிகமான லாபமாகும்.

ஜெப் பெஸோஸ் மைக்க்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். 90 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு பட்டியலில் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 2,043 பேர் உள்ளனர். இந்த உயரடுக்கின் மொத்த நிகர மதிப்பு கடந்த ஆண்டை விட 18 சதவீதம் வரை உயர்ந்து 9.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

மெர்க்குரி, கார்த்திக் சுப்புராஜ், பிரபுதேவா, பென் ஸ்டுடியோஸ், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்

அசிம் பிரேம்ஜி இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார். மொத்த மதிப்பு 18.8 பில்லியன் அமெரிக்க டாலர், உலக அளவில் 58 வது இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து லட்சுமி மிட்டல் 18.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இந்திய அள்வில் 3-வது இடத்திலும் உலகளவில் 62-வது இடத்திலும் உள்ளார்.

தொடர்ந்து சிவ் நாடார் உள்ளார். உலக அளவில் 98-வது இடத்தில் உள்ளார். சொத்து மதிப்பு 14.6 பில்லியன் அமெரிக்க டாலர்.

தொடர்ந்து திலீப் ஷாங்வி உலக அளவில் 115-வது இடத்தில் 12. 8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.

மேலும் 10 இந்திய பணக்காரர்களில் குமார் பிர்லா( 11.8 பில்லியன்- உலக அளவில் 127) உதய் கோடக் ( 10.7 பில்லியன் அமெரிக்க டாலர் உலக அளவில் 143) ராதா கிஷன் தமனி ( 10 பில்லியன் அமெரிக்க டாலர் உலக அளவில் 151 ) கவுதம் அதானி (9.7 பில்லியன் அமெரிக்க டாலர் உலக அளவில் 154 ) சைரஸ் பூனா வாலா( 9.1 பில்லியன் அமெரிக்க டாலர் உலக அளவில் 170 ) ஆகியோர் உள்ளனர்.

உலக அளவில் 8 இந்திய பெண்கள் கோடீசுவரர்களாக உள்ளனர். உலக அளவில் 256 பெண்கள் கோடீசுவர்ரகளாக உள்ளனர். சாவித்திரி ஜிண்டால், ஜிரண் மசூம்தார் உள்பட 6 இந்திய பெண்கள் போர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர்.

சாவித்திரி ஜிண்டால் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் அமெரிக்க டாலருடன் 176 வது இடத்தில் உள்ளார்.

கிரண் மசூம்தார், 3.6 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்புடன் 629 வது இடத்தில் உள்ளார்.

ஸ்மிதா கிருஷ்ணா-கோத்ரேஜ் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 822-வது இடத்திலும், லீனா திவாரி 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 1020 வது இடத்தில் உள்ளனர்.

பதஞ்சலி ஆச்சாரி பாலகிருஷ்ணா, இணை நிறுவனர் உலக அளவில் 74-வது இடத்தில் உள்ளார். சொத்து மதிப்பு 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

ஆச்சார்யா பாலகிருஷ்ணா தனது செல்வத்தை வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களில் இருந்து பெறுகிறார். பாலகிருஷ்ணா தனியார் நிறுவனத்தில் 98.6 சதவிகிதத்தை சொந்தமாக கொண்டு உள்ளார், அவர் அரசியல் ரீதியாக நன்கு இணைக்கப்பட்ட யோகா குரு பாபா ராம்தேவ் உடன் இணைந்துள்ளார் என போர்ப்ஸ் கூறி உள்ளது.

முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி, 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 887-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2017 ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் 544-லில் இருந்து 766-வது இடத்திற்கு வந்துள்ளார், அவரது சொத்து மதிப்பு $ 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.