எக்ஸாம் வெப் விமர்சனம்
நடிகர்கள் :துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ்,வசுந்தரா,நரேன் மணி, மற்றும் பலர்.
இசை:சாம் C. S
ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன்,
இயக்கம்: சற்குணம்,
தயாரிப்பு: வால் வாச்சர் ஃபிலிம்.

ஏழை எளிய மக்களின் நம்பிக்கையான ஒன்றானது அரசு நடத்தும் இந்த தேர்வு அதன் மூலம் தன் வாழ்வில் முன்னேறிவிடலாம் என்று கனவோடு இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த எக்ஸாம், தேர்வு நடத்தும் அதிகாரிகள் பின்னணியில் சூழ்ச்சி என்னவென்று வெப் சீரியஸ் வழியாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள் இயக்குனர் சற்குணம் .
இந்த எக்ஸாம் வெப் சீரியஸ் கதாநாயகி மையமாகக் கொண்டு தன் தாயுடன் நாடோடியாக வாழ்ந்து வருகிறார் ஒரு கிராமத்தில் ஒரு சிறிய வேலையில் இருந்து கொண்டு மிகவும் எளிமையான வாழ்க்கையில் இருந்து தான் படித்து தேர்வு எழுதி முன்னேறலாம் என்று கனவோடு நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகி இந்த எக்ஸாம் தேர்வில் எழுதி தன் லட்சியத்தை நிறைவேற்றி விடலாம் என்று இந்த தேர்வு எழுத இருக்கும் கதாநாயகிக்கு அதில் ஏற்படும் சிக்கல்கள் வாழ்க்கை மாற்றங்கள் என்னவென்று கதையின் நகர்வு பிறகு அவர் தேர்வில் வெற்றி பெற்றாரா இலட்சியத்தை அடைந்தாரா அவர் வாழ்வில் நடந்த பிரச்சனைகளை கடந்தாரா என்பதுதான் மீதி கதை .
துசாரா விஜயன் ஒரு கிராமத்து சாதாரண பெண்ணாகவும் மன உறுதி, கோபம்,பயம், நம்பிக்கையுடன் எதார்த்தமான நடிப்பில் நம் மனதை வென்று விடுகிறார் தன் திறமையால் இலட்சியத்தை அடைய முடியாத அந்த ஏக்கத்தையும் மன வலியையும் மிகவும் சிறப்பாகவே செய்துள்ளார், அவர் இதுவரை நடித்த கதாபாத்திரத்தில் இந்த கதாபாத்திரமே மிகச் சிறந்தது.

அதிதபாலன் நடித்துள்ள கதாபாத்திரம் கதையின் வலுவான அடித்தளம், சவாலான கதை பாத்திரத்தை தேர்ந்தெடுத்து மிக நம்பிக்கையுடன் அமைதிப் புயல் போல் நடிப்பால் வலம் வருகிறார்.
அப்பாஸ் தனக்கு தந்தது வேலையை சிறப்பாகும் சரியாகவும் செய்திருக்கிறார் கதைக்கு இவர் ஒரு பக்கம் பலம் என்று தான் சொல்ல வேண்டும்.
வசுந்தரா மற்றும் நரேன் மணி உள்ளிட்ட துணை நடிகர்களும் கதையின் நம்பகத்தன்மையை உயர்த்தும் வகையில் தரமான நடிப்பை வழங்கியுள்ளனர். எந்த கதாபாத்திரமும் தேவையற்றதாக தெரியாமல், ஒவ்வொருவருக்கும் கதையில் முக்கிய பங்களிப்பு இருப்பது தொடரின் சிறப்பாகும்.
இசை கதைக்கு ஏற்றவாறு சிறப்பாகவே அமைந்திருக்கிறது அதிகம் இல்லாமல் ரசிக்கும்படி மிகவும் நன்றாகவே அமைந்துள்ளது அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு இருண்ட சூழ்நிலையும் பதட்டமான சூழலும் சிறப்பாகவே , காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது ஒலி பதிவாளருக்கு நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.
மொத்தத்தில் இந்த எக்ஸாம் சிறந்த தேர்வு, அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த வெப் சீரியஸ்.

