எங்கள் தங்கம் – திரைவிமர்சனம்
நடிகர்கள் : சமந்தா, கௌதமி, ஆனந்த்,திகந்த் மஞ்சாலே, குல்ஷன் தேவய்யா, மற்றும் பலர்.
இசை: சந்தோஷ் நாராயணன்,
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ் isc,
இயக்கம்:B. V. நந்தினி ரெட்டி.
தயாரிப்பு: டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் .

வழக்கம்போல் கதாநாயகன் இல்லாமல் கதாநாயகியை மையமாக வைத்து எடுத்த முயற்சி ஒரு நல்ல முயற்சியை தான், கதாநாயகி தன் விரும்பிய காதலனை திருமணம் செய்து கொண்டு தன் மாமியார் வீட்டிற்கு முதல் முறையாக வருகிறார், அங்கு மாமியார் குடும்பமோ பெரிய குடும்பம் பாரம்பரிய பழக்கமுடைய குடும்பமாக இருக்கிறது அவர்கள் எதிர்பார்ப்பை அவள் பூர்த்தி செய்கிறாளா இல்லையா என்று ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கதாநாயகையுடன் அவர் வாழ்க்கையின் மறுபக்கம் மர்மம் நிறைந்திருக்க அது என்னவென்று தெரியாமல் தன் வாழ்க்கையை அமைதியுடன் அழகாக வாழ்ந்து கொண்டு வருகிறான் சாத்தரூபனியா இருக்கும் அவளை மறுபக்கம் ஜான்சி என்ற ஒரு கதாபாத்திரம் வெளிவர அதை தன் குடும்பத்துக்கு தெரியாமல் இருக்க போராட்ட பிறகு தன் குடும்பத்துக்காகவும் போராடவும் இறுதியில் என்ன ஆயிற்று என்பது தான் மீதி கதை.
கதாநாயகி சமந்தா,தான் எடுத்துக்கொண்ட சவாலான இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார் அதுவும் தன் மாமியார் குடும்பத்திற்கு தான் சிறந்த பெண் என்று நிரூபிக்க போராடும் விதமோ மிகச் சிறப்பானது மறுபுறம் அதிலும் சண்டைக் காட்சிகள் அவர் எடுத்திருக்கும் முயற்சியும் மிகப்பெரிய பலம் அவரது அர்ப்பணிப்பு தெளிவாக தெரிகிறது.
கௌதமி மற்றும் ஆனந்த் இவர்களின் நடிப்பும் கதைக்கு ஏற்புடையதாக இருக்கிறது கதாநாயகன் கணவராக வரும் அவர் நடிப்பும் மறுபக்கம் ஒரு பலம்தான் மற்ற துணை நடிகரின் நடிப்பும் சிறப்பாகவே செய்துள்ளார்கள்,
இசை சந்தோஷ் நாராயணன் இசையில் சண்டை காட்சிகளில் வரும் பின்னணி இசை கச்சிதமாக அமைந்திருக்கிறது, ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு கதைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
படத்தின் மிகப்பெரிய பலமே கதை கருதான் ஆனாலும் நேரத்தை குறைத்து இருக்கலாம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம் ஆரம்பத்திலேயே கதை என்னவென்று நம்மால் யூகிக்க முடிந்து விடுகிறது.
ஆக கதாநாயகி மையப்படுத்தி எடுத்திருக்கும் இந்த இயக்குனருக்கு நிச்சயம் ஒரு பாராட்டு, ஒரு பெண் குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் மறுபுறம் எதிரிகளை எதிர் கொள்ள ஒரு பலசாலியாக இருக்க வேண்டும் என்பதை சொன்ன விதம் சிறப்பு.
மொத்தத்தில் எங்கள் தங்கம் தன் குடும்பத்தின் போராட்ட களம்.

