டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் “பாராசூட்” சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது!!

cinema news Web Series

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் “பாராசூட்” சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  இயக்குநர் ஶ்ரீதர்.K இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸான  “பாராசூட்” சீரிஸை அறிவித்துள்ளது.

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும்.

பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முக திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள்.

இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.  கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.