full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

சார்லி சாப்ளின் 2 விமர்சனம் 3/5

வெற்றி படங்களை 2 ஆம் பாகம் எடுக்கும் வழக்கம் சமீப காலமாக கோலிவுட்டை ஆட்டிப்படைக்கிறது.

அப்படியாக பல வருடங்களுக்கு முன் பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது.

படத்தின் கதைப்படி, படத்தின் நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் தனது காதலை சொல்வதில் ஆரம்பித்த குழப்பம் கடைசி வரை நீடிக்கிறது.

நாயகியும் காதலுக்கு தலையசைக்க, அவரது தந்தை பிரபுவின் சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது. திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும் ஆபத்து. அதை எப்படி பிரபுதேவா சமாளிக்கிறார் என்பதுதான் படம்.

பிரபுதேவாவை மீண்டும், அதே என்ர்ஜியோடு பார்ப்பது கண்களுக்கு விருந்து. டைமிங் காமெடி, நடனம், எமோஷ்னல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நிக்கி கல்ராணியின் அழகிலும், கவர்ச்சியிலும் சொக்கி கிடப்பவர்களுக்கு இப்படம் அவர்களுக்கு விருந்துதான். படம் முழுக்க தாராளமாக நடித்து இளைஞர்களைக் கவர்கிறார்.

ஆதாசர்மாவும் தனது பங்கிற்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார்.

துபாய்ராஜாவாக வருகிற விவேக்பிரசன்னா படத்தில் நடக்கிற எல்லாக் குழப்பங்களுக்கும் மூலக்காரணமாக இருக்கிறார்.

நாயகியின் தந்தையாக வரும் பிரபு, தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டு நடித்திருக்கிறார்.

செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறது.

அம்ரீஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பொருத்தம்.

படம் முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர், கதையிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.