படைவீரன் – விமர்சனம் !

  எல்லோரும் மூடி மறைக்க முயலும் ஒரு விஷயத்தை மிகத் துணிச்சலாக அப்பட்டமாக அப்படியே படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் தனா. அந்த தைரியத்திற்கு முதலில் வாழ்த்துகள். “இப்ப எல்லாம் யாருங்க ஜாதி பார்க்குறாங்க” என்று மேம்போக்காய் பிரச்சினைகளை அணுகும் திரையுலகில், இப்படி ஜாதியையும் ஜாதி வெறியையும் மிக இயல்பாய் காட்டியிருப்பது நல்ல முன்னேற்றம். காரணம் மறைத்து மறைத்து ஒரு விசயத்தைப் பேசும்போது அவற்றை நேரடியாக விவாதத்திற்கு உட்படுத்த முடிவதில்லை. “படைவீரன்” போன்று ஜாதி வெறி கொண்டவர்களைப் […]

Continue Reading

மன்னர் வகையறா விமர்சனம்!

முதலில் இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு நன்றிகள்..  இந்த மண்ணில் சாதி வலுவானதாகவே இருக்கிறது என்பதை எந்த பூசலும் மொழுகலும் இல்லாமல் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நியாயப்படுத்தவும் வேறு செய்கிறார். எப்படியெனில், எங்கிருந்தோ வரும் ஷெட்டி, ரெட்டி, மேனன் எல்லாம் சாதி போட்டிக்கொள்ளும் போது இந்த மண்ணில் நாங்கள் சாதியை பெயருக்கு பின் போட்டுக்கொள்ளக் கூடாதா? என்று கேள்வி எழுப்புகிறார். நல்ல கேள்வி பூபதி பாண்டியன் சார். பெரியார் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாய்ப் பெருமைப்பட்டிருப்பார். ஒருவேளை பூபதி […]

Continue Reading

நிமிர் – விமர்சனம்!

திரையெங்கும் பச்சைப் பசேலென்று விரியும் காட்சிகளோடு, செவிப்பறை அதிர்ந்து கிழியும் படியான ஒலியதிர்வுகள் இல்லாமல் மிக சாதாரணமான மிக இயல்பான ஒரு தமிழ் சினிமா இந்த “நிமிர்”.

Continue Reading

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

மின்சார வாரிய உதவி பொறியாளர் வேலைக்கு 12 லட்சம்.. தொழிற்நுட்ப உதவியாளர் வேலைக்கு 6 லட்சம். நல்ல லாபம் (?) வரும் போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் போஸ்டிங் என்றால் ஒரு கோடி ரூபாய்.. இப்படித்தான் இன்றைக்கு அரசாங்க உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சாதாரண ஆயம்மா வேலையிலிருந்து தீர்ப்பு வழங்குகிற நீதிபதி வேலை வரைக்கும் “தகுதி” என்பது இப்போதெல்லாம் அப்பட்டமாக பணமென்றாகி விட்டது. புஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் வாங்குவது போல், ஒரு விஆஒ-விடம் கையெழுத்து வாங்கும் […]

Continue Reading

குலேபகாவலி – விமர்சனம்!

அப்பாடா எவ்ளோ நாளாச்சு இப்படி வயிறு வலிக்க சிரிச்சு?? தேங்க்ஸ் டூ “குலேபகாவலி”. கருத்து இருக்கா ? இல்லை.. செண்டிமென்ட் இருக்கா? இல்லை.. லாஜிக் இருக்கா? இல்லை.. இப்படி பல இல்லைகள் இருந்தும், ஒரு படம் நம்மை மகிழ்விக்க வேண்டுமெனில் ஒன்று மட்டும் இருந்தால் போதும்… எண்டெர்டெயின்மெட்! “குலேபகாவலி” முழுக்க எண்டெர்டெயின்மெண்ட்..எண்டெர்டெயின்மெண்ட்.. எண்டெர்டெயின்மெண்ட் மட்டும் தான்.. நம்ம “ஊர்வசி ஊர்வசி” பிரபுதேவா அப்படியே திரும்பக் கிடைத்திருக்கிறார். என்னா ஸ்பீடு.. என்னா மூவ்மெண்டு.. சொன்னாலும் சொல்லாட்டாலும் பபுள்கம் பாடி […]

Continue Reading

விதி மதி உல்டா – விமர்சனம்!

நம் வாழ்வில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், அவற்றை மதியால் எப்படி வெல்லலாம் என்பதே “விதி மதி உல்டா” படம். அறிமுக இயக்குநர் விஜய் பாலாஜி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராம். அந்த புத்திசாலித்தனமும், காட்சிகளை விவரிக்கிற விதமும் குருவுக்கு தப்பாத சிஷ்யன் என்பதை நிரூபித்திருக்கிறார். கையாள்வதற்கு கடினமான திரைக்கதையை கவனமாக கையாண்டு கடைசி வரை படத்தை கொண்டு போயிருக்கிறார். ஆனால்? எல்லாவற்றையும் காமெடியாகவே சொல்லி, படத்தின் சீரியஸ் தன்மையை குறைத்தது ஏனோ […]

Continue Reading

பலூன் – விமர்சனம்!

பேய்க்கதையாக இருந்தாலும் எடுத்துக்கொண்ட கருவிற்காக மனமுவந்து பாராட்டலாம் இயக்குநர் சினிஷை. அந்த ஒரு காரணம் மட்டுமே படத்தை மற்ற பேய்ப்படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தியிருக்கிறது. சாதியை மூலதனமாக்கி அரசியல் செய்யும் ஒரு போலி அரசியல்வதியினால் நிகழ்த்தப்படும் ஆணவக் கொலையினைப் பிந்தொடர்ந்து நட்க்கிற விஷயங்களை கற்பனை கலந்து அமானுஷ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இங்கு இன்னும் பல அரசியல்வாதிகள் இந்தப் படத்தில் வருகிற வில்லன்களாகத்தான் இருக்கிறார்கள். அதே போல் இந்த மண்ணில் ஆணவப் படுகொளை செய்யப்பட்ட காதல் ஜோடிகள் எல்லாம் ஆவியாக […]

Continue Reading

உள்குத்து – விமர்சனம்!

“திருடன் போலிஸ்” படத்தின் கூட்டணி தினேஷ்-கார்த்திக் ராஜு-பால சரவணன் மீண்டும் இணைந்திருக்கும் “உள்குத்து” அப்படியும் இப்படியுமாய் பயணிக்கிறது. இது நல்ல படமா? சுமாராண படமா? மொக்கை படமா? என கணிக்க முடியாமல் இருப்பதால் படம் தப்பிக்கிறது. திருடன் போலீஸ் படத்திலிருந்து நிறைய மிஸ்ஸிங் இந்தப் படத்தில். அதில் இருந்த எதார்த்தம் இந்தப் படத்தில் இல்லையோ? என்று என்னத் தோன்றுகிறது. கடற்புறத்தில் படமாக்கியிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி படத்தில் மீனவர் சம்பந்தப்பட்ட எந்த சாயலுமே இல்லை. அதேபோல் கந்துவட்டி பற்றிய […]

Continue Reading

சங்குச்சக்கரம் – விமர்சனம்!

குழந்தைகளுக்கான படமெடுத்து, அந்த குழந்தைகளின் மூலமாகவே மிக எளிமையாக பகுத்தறிவு பேசியிருக்கிறார் இயக்குநர் மாரிசன். வெல்கம் ப்ரோ!. இத்தனைக்கும் இது பேய்ப்படமாம். பேய் என்றால், காலங்காலமாக கண்டிப்பாக ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அந்தப் பேய் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்கக் காத்திருக்கும். ஆனால் இது எதுவுமே இல்லை இந்தப் பேய்ப் படத்தில். மாறாக, கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்தப் பேய் நம்மையும், நாம் வாழ்கிற இந்த சமூகத்தையும் அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்தப் பேய் சொல்கிற அத்தனையும் இந்த சமூகத்தில் […]

Continue Reading