ஆச்சரியப்பட வைக்கும் 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்

ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகளையும் முடித்து விட்டால் ‘2.0’வின் படப்பிடிப்பு  முடிந்துவிடும் என்ற நிலையில், ஆயுத பூஜை அன்று இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தீபாவளி திருநாளில் ‘2.0’ திரைப்படம் திரைக்கு உள்ளது. சில மாதங்களுக்கு […]

Continue Reading

நடிகை ரம்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘குத்து’ படம் மூலம் பிரபலமான ரம்யா சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அரசியலில் நுழைந்து காங்கிரஸ் எம்.பி. ஆனார். அதன்பின், கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக, அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அவர் சாப்பிட்ட உணவு, விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு […]

Continue Reading

ரஜினி வீட்டில் குற்றம் 23

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குற்றம் 23’. அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இன்று ‘குற்றம் 23’ படக்குழுவினர் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் கலைஞர்கள் வெற்றி பெறும்போது […]

Continue Reading

1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற வைகை எக்ஸ்பிரஸ் டிரைலர் வெளியீட்டு விழா

மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும், அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..? அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.,” உலகில் […]

Continue Reading
maris vijay

இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் உருவாக்கியுள்ள “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ!

இசை என்பதே, ஏகாந்தமான ஒன்று. அதிலும் சினிமா இசை, காலம்தோறும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. சினிமாவின் அடிநாதமாக இருக்கும் பாடல்களையும், பின்னணி இசையையும் உருவாக்குவதில் முக்கியமான அங்கம் வகிப்பவை ஒலிப்பதிவு கூடங்கள் என்று அழைக்கப்படுகிற ஸ்டுடியோக்கள். அந்த வகையில், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக உருவாகி உள்ளது, “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ. சென்னை அசோக் நகரில், அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அழகான அட்மாஸ்பியர் கொண்ட “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி உள்ளார், இசையமைப்பாளர் மாரீஸ் […]

Continue Reading

அஜித்தை சந்தித்து மனைவியின் கோபத்திற்கு ஆளான விஜய் சேதுபதி

அஜித் படப்பிடிப்பின்போது யாரையும் சந்தித்து பேசுவதோ, யாருடைய வேலையிலும் மூக்கை நுழைப்பதோ கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பயபக்தியோடு இருப்பவர். அப்படி இருக்கையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார். அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபதிக்கு அங்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்துள்ளது. அதாவது, அஜித் விஜய்சேதுபதியிடம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் […]

Continue Reading

ஜெயம் ரவிக்கு வில்லனாகும் பிரபல சிங்கப்பூர் நடிகர்

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். விண்வெளியை மையப்படுத்தி உருவாகிவரும் முதல் இந்திய படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு பிரம்மாண்ட பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் […]

Continue Reading

அருண் விஜய்யை பாராட்டிய ரஜினி

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் ‘குற்றம் 23’. இப்படத்தை ‘ஈரம்’, ‘வல்லினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அனைவர் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சனங்களும் இப்படத்திற்கு மிகவும் சாதகமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், ரஜினி நேற்று இப்படத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக அருண் விஜய்க்கு போன் போட்டு சொல்லியுள்ளார். ரஜினி […]

Continue Reading