சமுத்திரகனியின் மூன்று முகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி கூடவே […]

Continue Reading

வில்லனாக விஷால் வித்தியாசம்

மோகன்லால் நடிப்பில் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாள படம் ‘வில்லன்’. இந்த படத்தின் மூலம் விஷால் முதல் முறையாக மலையாள பட உலகில் கால் வைக்கிறார். இதில் விஷாலுக்கு வில்லன் வேடம். தற்போது இந்த படத்தில் தாடி வைத்து கண்ணாடி அணிந்து இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ‘வில்லன்’ படத்தில் மோகன்லால் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். ஹன்சிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் […]

Continue Reading

ரஜினிக்கு வில்லன் நானா?

  பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா’ படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும் ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி பாட்டீல் நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, சம்பத், ரவி […]

Continue Reading

நயன்தாரா படத்தின் உரிமை த்ரிஷாவுக்கு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக `இமைக்கா நொடிகள்’ உருவாகி வருகிறது. முன்னணி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாராவின் கணவராக சாதுவான கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் […]

Continue Reading

சிங்கமும், சிறுத்தையும் ஒரே படத்தில்!

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அவரது தம்பி கார்த்தி. அதன்பின்னர், ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் கதாநாயகனாகி, பின்னர் பல வெற்றிகளை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சூர்யாவும், கார்த்தியும் ஒரே துறையில் பணியாற்றி வருவதால் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வந்தது. சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் கார்த்தி, நானும் சூர்யாவும் இணைந்து […]

Continue Reading

சிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டாராக்கிய விஜயின் தயாரிப்பாளர்

தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது, சிவகார்த்திகேயனை “இளம் சூப்பர் […]

Continue Reading

தொற்று ஏற்படுத்திய தாக்கத்தில் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் இளைஞர்களைக் கவரும்படி படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு, `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது தயாரிப்பில் ஆர்.கே.நகர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ் குறித்த அறிவிப்பையும் […]

Continue Reading

தமிழக உரிமைகள் பறிபோக சுயநல அரசியல் கட்சிகளே காரணம் : தங்கர்பச்சான் காட்டம்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் தமிழக அரசியல் கட்சிகளை விமர்சித்து, ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  அனைவருக்கும் வணக்கம். நீரின்றி அமையாது உலகு. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதாவர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும்  நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள். பதவியில் இருந்தவர்களும், அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் அதைப்பற்றி சிந்தனையே இல்லாமல் சொல்வதற்கெல்லாம் துணையாய் இருந்து தலையை ஆட்டினார்கள். இதையெல்லாம் பொறுப்பற்ற […]

Continue Reading

கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் வரலட்சுமி, இயக்குநர் பேரரசு.

வாக்ஸ் குழும நிறுவனர் அமரர் சோ ஞானசுந்தரம் அவர்களின் நினைவு நாளையொட்டி வாக்ஸ் அறக்கட்டளை சார்பாக 800 ஏழை எளிய மாணவர்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர்-தலைவர் மக்கள் நல பாதுகாவலர் ஆ.ஹென்றி தலைமை ஏற்றார். கல்வி கொடை வள்ளல் வாக்ஸ் குழுமம் சேர்மேன் ஞா.இராவணன் அவர்கள் கல்வி உதவியை வழங்கினார். மேலும் இந்த விழாவில் குழுத் தலைவர் இராவணன் […]

Continue Reading

விரைவில் வெளியாகும் சவரிக்காடு

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் சவரிக்காடு. இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.என்.கிருஷ்ணகுமார் இயக்கி வருகிறார். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம். முழுக்க முழுக்க […]

Continue Reading