”நாட்டில் புரட்சி தொடங்கி இருப்பதாக நினைக்கிறேன்”: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டதாகவும், கோட்டை நோக்கிய பயணம் தொடங்கி விட்டது என்றும் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தனியார் டெலிவிஷன் ஒன்றில் ‘பிக்பாஸ்’ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோதும் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சக்தி, கமல்ஹாசனிடம் “என்னைப்பார்த்து நீங்கள் அரசியலில் ஈடுபடலாம் என்று கூறியது கேலி செய்வதுபோல் இருந்ததாக பலரும் பேசினார்கள்” என்று சொல்லி வருத்தப்பட்டார். இதற்கு கமல்ஹாசன், “இப்போது இருக்கிற […]

Continue Reading

ரசிகர்களுக்கு ஜூத்வாவில் டாப்சியின் விருந்து

டாப்சி, வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தி படம் ‘ஜூத்வா-2’. இதில் ரம்பா வேடத்தில் டாப்சி கவர்ச்சியாக நடித்திருக்கிறார். “‘ஜூத்வா-2’ நகைச்சுவைப் படம். இதில் ஏராளமான நடனக் காட்சிகள் உள்ளன. இது போல நிறைய கவர்ச்சிக் காட்சிகளும் உள்ளன. தென் மாநிலப் படங்களில் நான் கவர்ச்சியான பெண்ணாக நடிக்கத் தொடங்கினேன். இந்திப் பட உலகில் 3 ஆண்டுகளாக என் படங்களை ரசிகர்கள் ரசித்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் […]

Continue Reading

மொட்டை கதை சொன்ன பியா

எந்த ஒரு காதல் படமும் காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அனுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசும் போது, ”இந்த படமும், இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலட்சுமி அவர்கள் எனக்கு […]

Continue Reading

விஜய் ஆண்டனியின் புதிய பரிணாமம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியானது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு பணிகளை விஜய் ஆண்டனியே […]

Continue Reading

சொன்னதை செய்து காட்டிய அனுஷ்கா

அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி குண்டானார். ‘பாகுபலி-2’ படத்துக்காக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்தார். என்றாலும், உடல் மெலியவில்லை. எனவே, ‘பாகுபலி-2’-ல் அனுஷ்காவின் உடல் தோற்றத்தை குறைத்து காட்ட கோடி கணக்கில் ‘கிராபிக்ஸ்’க்காக செலவு செய்தனர். பின்னர் ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, தீவிர […]

Continue Reading

அருண்ராஜாவுக்கு கிடைத்த ஆதரவுக்குரல்

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்குநராக புதிய அவதாரம் எடுத்திருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். அவர் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள படத்தின் கதைக் களமும் இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பதால் அதுவே சினிமா ரசிகர்களிடையே சூடான செய்தியாக பரவி வருகிறது. இந்த செய்தி வெளியாகியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தேவிகா பல்சிகர் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது […]

Continue Reading

சரஸ்வதி பூஜை விடுமுறையில் அறம் இருக்குமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `அறம்’, `வேலைக்காரன்’, `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, சயீ ரா நரசிம்மரெட்டி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் `வேலைக்காரன்’ படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னமும் முடிவடையாததால் […]

Continue Reading

கதை கேட்டு மெளனமான விஜய்சேதுபதி

‘ரௌத்ரம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் – விஜய் சேதுபதி கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் படம் ‘ஜுங்கா’ ஜூங்கா படத்தைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ […]

Continue Reading

லிப்ரா குறும்பட விழாவில் ’53’

நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்படப் போட்டி ஒன்றை மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. இந்த குறும்படப் போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரொடக்சன்ஸ். அவ்விதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 53 […]

Continue Reading

திகிலுடன் காதல் என்னோடு நீ இருந்தால்!

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் “என்னோடு நீ இருந்தால்”. இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – நாக.சரவணன், இசை – கே.கே, எடிட்டிங் – ராஜ்கீர்த்தி, கலை – எஸ்.சுப்பிரமணி, நடனம் – கேசவன், ஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி, தயாரிப்பு […]

Continue Reading