ஆஹா கல்யாணம்!… தரணுக்கும், தீக்‌ஷிதாவுக்கும்

பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது. […]

Continue Reading

வேலைக்காரன் தாமதத்தால் களமிறங்கும் கருப்பன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பன்’ வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு […]

Continue Reading

ஹரஹர மகாதேவகி டீமோடு கெளதம் கார்த்திக்கின் மற்றொரு படம்

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’. சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான பாடல்களை நேற்று வெளியிட்டனர். இதில் பேசிய கௌதம் கார்த்திக், ‘இந்த படத்தின் கதை பலருக்கு சென்று மீண்டும் என்னைத் தேடி வந்துள்ளது. இயக்குனர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களைத் தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் மிகவும் ரசித்து, சிரித்து […]

Continue Reading

அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன விஜய்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல்வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது என்றும் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தனர். […]

Continue Reading

டிரெண்ட் ஆகும் துப்பறிவாளன்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அரோல் காரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்தது. இறுதியாக விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு காண்பித்தனர். படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் […]

Continue Reading

வதந்திகள் வருத்தமளிக்கிறது : எஸ்.பி.பி

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உடல் நிலை சரியில்லை என்று சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு உடல் நிலை சரியில்லை என்று உலகம் முழுவதிலும் இருந்து போன் வருகிறது. நான் […]

Continue Reading

எதிர்காலத் தலைமுறையின் வாழ்வை முடக்கும் திட்டம் நீட் : தங்கர்பச்சான்

நீட் தேர்வு குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக கட்சியின் நேர்மையற்ற அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இழைத்து வந்த துரோகத்திற்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் […]

Continue Reading

ஊரையே துரத்திவிட்ட காதல் ஜோடி

ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘நாடோடி கனவு’. மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், நாயகியாக சுப்ரஜாவும் நடித்துள்ளார். வீர செல்வா இயக்கியுள்ள இந்த படத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். இம்மாதம் திரைக்கு வரவிருக்கிற இந்தப் படத்தில் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜிஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் […]

Continue Reading

மிக மிக அவசரத்தில் பாட்டெழுதிய சேரன்

  பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். இப்படம் குறித்து அவர் பேசிய போது, “இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது […]

Continue Reading

பாரதிராஜா தலைமையில் ஓவியா அண்ணனுக்கு திருமணம்

“களவாணி” படத்தில் நடிகராக அறிமுகமான திருமுருகன், யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார். அப்படத்தில் ஓவியாவின் அண்ணனாக நடித்திருந்த இவர், அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார். திருமுருகனுக்கும், அவரது உறவுக்காரப் பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று […]

Continue Reading