ஏ ஆர் முருகதாஸ் வெளியிடும் ஆவணப்படம்

பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் கபிலன் வைரமுத்து. இவரின் `இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற ஆவணப்படம் ஒன்று தயாராகி உள்ளது. சமீபத்தில் அதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து, இந்த ஆவணப்படம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார். பல கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மக்கள் அணுக்கப் பேரவை (MAP) என்ற மாணவர் இயக்கம் குறித்த ஆவணப்படம் தான் `இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற […]

Continue Reading

விக்ரம் படத்தில் முன்னணி நடிகர்கள்

அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விக்ரம் தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படும் ‘சாமி-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார். ஹரி இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு மற்றும் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் […]

Continue Reading

இயக்குநர் சசியின் அடுத்த பட டைட்டில்

சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். குடும்ப பின்னணியில் அன்பு, கோபம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் […]

Continue Reading

கமல்ஹாசனை சந்திக்கிறார் முதல்வர்

சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், […]

Continue Reading

பார்ட்டி முடித்து திரும்பிய வெங்கட்பிரபு டீம்

`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் ஷ்யாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் […]

Continue Reading

வித்தியாசமான தோற்றத்தில் எடக்கு பண்ணும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. இப்படத்தைத் தொடர்ந்து இவர் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘96’, ‘ஜுங்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இத்துடன் நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பாலு தயாரிக்கும் ‘எடக்கு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். எஸ்.சிவன் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பேசிய போது, “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் […]

Continue Reading

கதை கேட்காமல் நடித்த காரணம் சொன்ன ‘கடுகு’ சுபிக்‌ஷா

‘அன்னக்கொடி’ படம் மூலம் பாரதிராஜாவால் தமிழில் அறிமுகமானவர் சுபிக்‌ஷா. பின்னர் மலையாளப் படங்களில் நடித்தார். விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது ‘நேத்ரா’, ‘கோலிசோடா-2’, ‘வேட்டைநாய்’, ‘சீமத்தண்ணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். “‘நேத்ரா’ ஆக்‌ஷன் த்ரில்லர் படம். இதில் ‘டைட்டில்’ வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘வேட்டைநாய்’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக அவரது மனைவி வேடத்தில் நடிக்கிறேன். இது மிகவும் அழுத்தமான கதாபாத்திரம். ‘சீமத்தண்ணி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. “இயக்குனர் விஜய்மில்டனின் […]

Continue Reading

ஜூவானந்தம், ஜெகதீஷை அடுத்து?

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மேலும் நடிகர் விஜய், அவரது காட்சிகளை நடித்து முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. `மெர்சல்’ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் […]

Continue Reading

7 பேரும் விடுதலைக்கு தகுதியானவர்கள் : சத்யராஜ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் ஒரு மாத பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ், வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்புகளை முடித்து விட்டு நேற்று பேரறிவாளனை பார்ப்பதற்காக ஜோலார்பேட்டைக்கு வந்தார். பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். […]

Continue Reading

சூப்பர் டீலக்ஸில் பாதிரியாராக பயணிக்கும் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் `துப்பறிவாளன்’. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பிசியாக இருக்கிறார். அதாவது இந்த படத்தில் பாதிரியாராக முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். அதுமட்டுமின்றி தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி, நீலன் சேகரை தவிர்த்து மிஷ்கினும் இப்படத்தின் ஒரு பகுதிக்கு இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, […]

Continue Reading