full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

ஏ ஆர் முருகதாஸ் வெளியிடும் ஆவணப்படம்

பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் கபிலன் வைரமுத்து. இவரின் `இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற ஆவணப்படம் ஒன்று தயாராகி உள்ளது. சமீபத்தில் அதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அதனைத்தொடர்ந்து, இந்த ஆவணப்படம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார்.

பல கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மக்கள் அணுக்கப் பேரவை (MAP) என்ற மாணவர் இயக்கம் குறித்த ஆவணப்படம் தான் `இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற தலைப்பில் தற்போது உருவாகி இருக்கிறது. இதற்குரிய ஆவணத்தை ர.கார்த்திகேயன் எழுதியிருக்கிறார்.

ஊழலற்ற சமுதாயம், நேர்மையான தலைவர் என மக்கள் விரும்பும் படியான, இந்த காலகட்டத்திற்குத் தேவையான ஒரு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு ஆவணப்படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.