மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு : கமல்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து கமல் கூறியதாவது, “மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் குறித்து அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். […]

Continue Reading

விஸ்வாசம் படத்தில் ‘வீரம்’ பட வில்லனுக்கு டப்பிங் பேசியவர்

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். சிவா – அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பட அதிபர்கள் போராட்டத்தால் மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. ஸ்டிரைக் முடிந்த பிறகு படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போஸ் வெங்கட் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் […]

Continue Reading

கௌதம் மேனனுக்கு எதிராக இன்னொரு சர்ச்சை!!

“நரகாசூரன்” பட ரிலீஸ் விவகாரத்தில் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் இயக்குனர் கவுதம் மேனனுக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரை உலகில் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவர் மீது குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “முதலில் தங்களை ஏமாற்றியதாக அவருக்கு எதிராக புகார் அளித்தோம். பின்னர் இந்த பிரச்சனையை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்தோம். இன்னும் பலர் […]

Continue Reading

எல்லாம் ஒரு காரணத்துக்காகத் தான் : சன்னி லியோன்

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்தவர் சன்னி லியோன். தற்போது, மும்பையில் தங்கியிருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து வாழும் சன்னி லியோன் முதலில் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இந்த நிலையில், தனது சினிமா வாழ்க்கை பற்றி, “என் பெற்றோரும், சகோதரரும் என் பாதுகாப்புக்காக அனைத்தும் செய்து இருந்தனர். என்றாலும், நான் 21 வயதிலேயே வெறுப்புகளை எதிர்கொள்ளும் […]

Continue Reading

கோலி சோடா 2 படத்தின் எதிர்பார்ப்புக்கு பதிலாக அமைந்த பாடல்!!

ஒவ்வொரு முறையும் ஒரு பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும்போது நாம் தேடுவது அதற்கான காரணத்தை தான். நல்ல பாடகர்களை வைத்து, இசைக்கருவிகளை சிறப்பாக உபயோகித்திருப்பதும் அதன் முக்கிய காரணமாக இருக்கும். அப்படிப்பட்ட கூறுகள் வெற்றிக்கு வழிவகுத்து, எப்போதும் கேட்கக் கூடிய ஹிட் பாடலாக அமையும். சமீபத்தில் வெளியான கோலி சோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் அந்த மாதிரி சிறப்பான அம்சங்களை கொண்டிருப்பதோடு நமது ப்ளே லிஸ்டில் திரும்ப திரும்ப கேட்கும் பாடலாக அமைந்துள்ளது. குறுகிய காலத்திலேயே […]

Continue Reading

உறுதியானது அட்லியின் அடுத்த படம்!!

  “மெர்சல்” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கப் போகும் அடுத்தப் படத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அவரது அடுத்த படத்தில் விஜய் அல்லது ரஜினி கதாநாயனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. இடையில் அஜித்துக்கும் அட்லி கதை சொல்லி இருப்பதாக வதந்திகள் எல்லாம் பரவியது. இந்நிலையில் அட்லி, தனது அடுத்த படத்தை தெலுங்கில் இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் நவிதேஜா நாயகனாகனாக நடிக்கிறார். இந்தப் படம், அவரது முந்தைய படமான […]

Continue Reading

மிஸ் இந்தியா எர்த்துடன் காதலில் மஹத்

விஜய்யுடன் ஜில்லா, அஜித்குமாருடன் மங்காத்தா படங்களில் நடித்து பிரபலமானவர் மஹத். பிரியாணி, வடகறி, சென்னை-28 இரண்டாம் பாகம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மஹத்தும் நடிகை டாப்சியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசு கிசுக்கள் வந்தன. பின்னர் காதலில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. தற்போது இந்தி நடிகை பிராச்சி மிஸ்ராவுக்கும், மஹத்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிராச்சி மிஸ்ரா 2012-ல் ‘மிஸ் இந்தியா […]

Continue Reading

டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் தான் வருங்காலம் : பாபி சிம்ஹா

திருட்டு பயலே-2 படத்திற்கு பிறகு பாபி சிம்ஹா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் `கம்மர சம்பவம்’. மலையாளப் படமான இதில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் பற்றி பாபி சிம்ஹா பேசும் போது, “என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய சினிமா அனுபவத்தில், இதுவரை நான் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும். `கம்மர சம்பவம்’ ட்ரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மகிழ்ச்சி […]

Continue Reading

காலாவை கண்ட மேனிக்கு வெட்டித் தள்ளிய தணிக்கை வாரியம்!!

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள ‘2.0’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தை முதலில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. ரஜினியின் மருமகனாகிய நடிகர் தனுஷ் தயாரித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிட முடிவு செய்து, ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் கடந்த ஒரு மாத காலமாக புதிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி […]

Continue Reading

ஸ்வாதிஷ்டாவின் வேடிக்கையான கனவு

திரைத்துறையில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் தனக்குத்தானே அளித்துக் கொள்ளும் போஷாக்கின் சிறந்த கூறு என்ன தெரியுமா? ‘ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு சவாலை எதிர்கொண்டு அவைகளை ;தகர்த்தெறிதல். நடிகை ஸ்வாதிஷ்டா இந்த நிலையில் அதை உள்ளூர உணர்ந்தே இருக்கிறார். “திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி” எனக் கூறும் ஸ்வாதிஷ்டா […]

Continue Reading