தனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்

உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் முதல் ஹாலிவுட் படமாக `தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் […]

Continue Reading

டீசர் ரிலீஸ்க்கு தயாராகும் பரத் படம்

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பைக் கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை […]

Continue Reading

உறுதியானது ரஜினி – விஜய் சேதுபதி மாஸ் கூட்டணி!!

“சன் பிக்சர்ஸ்” தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது கார்த்திக் சுப்புராஜ் என்பது எல்லோரும் அறிந்ததே.. ரஜினிகாந்த் தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் அவர் திரும்பிய உடன், கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் விவரம் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால், ஊடகங்களில் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியிட்ட வண்ணமே இருந்தது. இந்நிலையில், […]

Continue Reading

முன்னணி கதாநாயகிக்கு விரைவில் திருமணம்

தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கெளசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கெளசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். கெளசல்யா […]

Continue Reading

மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை […]

Continue Reading

ரகுல் ப்ரீத்துக்கு பிறகு சாய்பல்லவி

தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷின் `மாரி-2′ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. என்ஜிகே […]

Continue Reading

NITTTR நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம்

1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR எனும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சுயாட்சி நிறுவனமாகும். தென்னிந்திய தொழில்நுட்ப கல்லூரிகளின் திறனை மேம்படுத்த, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இப்போது பல துறைகளை கொண்டு இயங்கி வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடக, தெலுங்கானா & பாண்டியை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவன ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை செயல்படுத்தி வருகிறது. […]

Continue Reading

காட்டேரிக்காக இலங்கையில் வைபவ்

`ஆர்.கே.நகர்’ படத்தைத் தொடர்ந்து வைபவ் அடுத்ததாக ‘காட்டேரி’ என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைபவ் மற்றும் மணாலி ரதோட் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மணாலி ரதோட் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Continue Reading

மறக்கக்கூடாத வரலாற்று சாதனை – பாடலாசிரியை உமாதேவி!!

மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடெங்கிலும் உள்ள தலித் மக்களின் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்ற பெருந்திரளான போராட்டங்களில், வன்முறை ஏற்பட்டு 12 தலித்துகளும் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து தலித் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. […]

Continue Reading

பாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக்கும், அவருடைய மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று […]

Continue Reading