8 தோட்டாக்கள் வெற்றியைத் தொடர்ந்து “ஜீவி”!!

“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது. “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, அஸ்வினி,மோனிகா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கும் படம் “ஜீவி”. இவர்களோடு முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன்,மைம் கோபி,ரோகிணி,ரமா நடிக்கிறார்கள். பாபுதமிழ் கதை,வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J கோபிநாத் இயக்குகிறார். படத்தைப்பற்றி இயக்குனர் கூறும்போது: “இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் […]

Continue Reading

தள்ளிப்போகும் எந்திரன் 2.0, ஏமாற்றத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய `காலா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிசியாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங்கில் துவங்கிய நிலையில், படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் […]

Continue Reading

பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படம்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் No 12’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, […]

Continue Reading

நீண்ட நாள் கனவை நனவாக்க களமிறங்கும் தீபிகா

தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக மாறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. சினிமா எனக்கு நிறைய கொடுத்து உள்ளது. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். பத்மாவத் படம் வசூல், […]

Continue Reading

படிக்கத் திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள் – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை!

சென்ற ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. அதன் பிறகு தான் தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இருந்தாலும் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், தமிழக மாணவர்கள் பலரும் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் தரப்பட்டதால் கடைசி நேரத்தில் மன உளைச்சலுக்கு […]

Continue Reading

காலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக […]

Continue Reading

ரஜினியின் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா

ரஜினி நடிப்பில் `காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். ஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி […]

Continue Reading

மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி!

கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘அம்மன் தாயி’.   இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் இருந்தார். இவருடைய உடல்கட்டமைப்பைப் பார்த்து ஹீரோ கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.   படத்தில் நாயகியாகவும், அம்மன் தெய்வமாகவும் நடிக்கிறார் ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி. சரண் […]

Continue Reading

இன்னும் எதிர்பாக்கிறேன் – “காலா” ரஜினி கலாய்!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. இருப்பினும் கர்நாடகா மற்றும் சில நாடுகளில் வெளியாவதில் மட்டும் இன்னும் சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தூத்துக்குடியில் ரஜினி பேசியதை வைத்துக் கொண்டு சிலர், “காலா” திரைப்படத்தை புறக்கணிப்போம் எனவும் பேசி வருகிறார்கள். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், “காவிரியை விட […]

Continue Reading

மீண்டும் போதையில் அதர்வா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கெளதம் மேனன் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். அதேபோல் ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை தயாரித்து வருகிறார். ஏற்கனவே ஒண்ராகா ஒரிஜினல்ஸ் வெளியிட்ட `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது. இந்த நிலையில், ஒண்ராகா ஒரிஜினல்ஸின் அடுத்த பாடல் […]

Continue Reading