பூஜையுடன் தொடங்கியது #SK14!!

“வேலைக்காரன்” திரைப்படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருக்கிறார். “சீமராஜா” படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து, ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி “இன்று நேற்று நாளை” படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு இப்போது தொடங்கியிருக்கிறது. இந்தத் தகவலை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “24 ஏஎம் ஸ்டுடியோஸ்” […]

Continue Reading

சஞ்சு படத்தில் சிறைச்சாலை மோசமாக சித்தரிப்பா?

பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதை இந்தியில் படமாகி உள்ளது. அவரது சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ‘சஞ்சு’ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த […]

Continue Reading

இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்துகளைக் கொண்ட அசுரவதம்!!

“7 ஸ்கிரீன் ஸ்டுடியோ” லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் “அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் இப்படம் வருகிற ஜூன் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் குழுவினர் கலந்துகொண்ட பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், “சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது […]

Continue Reading

ஷாருக்கானுடன் இணைந்த பிங்க் கூட்டணி

ஷாருக்கான் ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் ஷாருக்கான் நடிக்கும் படங்களும் ஜான் ஆப்ரஹாம், சித்தார்த் மல்ஹோத்ரா, அஜய் தேவ்கன், நடித்த படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக ஷாருக்கான் தயாரிப்பில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார். பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘பட்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி இருவரும் […]

Continue Reading

தடதடக்கும் சிம்பு.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்!!

சிம்புவும், சர்ச்சையும் கூடப் பிறந்த பிறப்புகளோ என்னுமளவிற்கு, அவரை சச்சரவுகள் பின் தொடர்ந்தே வரும். ஷூட்டிங்கிற்கு சீக்கிரம் வரமாட்டார், ஷெட்யூலை இழுத்தடிப்பார் என சிம்பு மீது புகார்கள் குவிந்த வண்ணம் தான் இருக்கும். கடைசியாக வெளியான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் வெளியான போது தான் பிரச்சனை பூதாகரமாக வெடித்து, சிம்புவுக்கு தடை விதிப்பது வரை போனது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். சிம்பு, மணிரத்னம் படத்திலா? […]

Continue Reading

பில்லா-3 படத்தில் சிம்பு?

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, விரைவில் அந்த படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு – சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து […]

Continue Reading

தலைவராக பதவியேற்றுக் கொண்ட மோகன்லால்

கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் எம்.பி. இருந்துவந்தார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்னசென்ட் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடிகர் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., […]

Continue Reading

திடீர் பிரிவால் மனம் வாடும் ஸ்ருதி ஹாசன்!!

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இயல்பில் பாடகியான இவர், சூர்யா நடித்த “ஏழாம் அறிவு” படத்தின் மூலம் நாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அஜித், விஜய் என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்தவர், இந்தி தெலுங்கு படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது, தனது சொந்த நிறுவனமான “இஸிட்ரோ மீடியா சார்பில்” “த மஸ்கிட்டோ பிலாஸபி” என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார். இதனை “லென்ஸ்” திரைப்படத்தை இயக்கிய […]

Continue Reading

விஸ்வரூப சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற ஜுன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் கமலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் […]

Continue Reading

ஆர்.கே.நகர், பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் அங்கீகாரத்தைக் கொடுக்கும்!!

இசைக்கலைஞர்கள் சூழ்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று சொன்னாலே நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பிற்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கும். குறிப்பாக, மேஸ்ட்ரோ இளையராஜா, கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு போன்ற மந்திர சாதனையாளர்கள் மத்தியில் பிறக்கும் போது அது இன்னும் சவாலானது. அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவும், தனித்துவமான இசையை கொடுப்பதற்கும் மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, பிரேம்ஜி அமரன் அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளிவந்து […]

Continue Reading