‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் #NatpeThunai Challenge..!!

சுந்தர்.சி. தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் செய்திகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது : – ஒவ்வொரு நண்பர் குழுவில் கேளிக்கை செய்யக் கூடிய நபர் ஒருவர் இருப்பார். அது மாதிரி நபர்களின் வேடிக்கை நடனக் காணொளியை #NatpeThunaiChallenge முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்களின் அடுத்தடுத்தக் காணொளியில் இடம் பெறுவார்கள். […]

Continue Reading

தமிழில் தடம் பதிக்க ஆசை: அறிமுக நடிகர் நிரந்த் !

தமிழில் தடம் பதிக்க ஆசை என்று ‘சந்தோஷத்தில் கலவரம் ‘பட அறிமுக கதாநாயக நடிகர் நிரந்த் கூறுகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘. இப்படத்தில் வித்தியாசமான நாயகன் பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளவர் நடிகர் நிரந்த். இவர் ஏற்கெனவே கன்னடத்தில் ‘லைப் பூ சூப்பர் ‘என்கிற கன்னட படத்தில் அறிமுகமானவர். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரின் நடை உடை பாவனைகள் பிடித்துப் போய் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி […]

Continue Reading

‘மகாமுனி‘ ஆகும் ஆர்யா!

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.  இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் […]

Continue Reading

கோடையில் குழந்தைகளை மிரட்ட வரும் ‘முனி -4’!

சில வருடங்களுக்கு முன் ராகவா லாரன்ஸ் நடிப்பில், இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ’முனி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முனி2, முனி 3 என அடுத்தடுத்து வெற்றிக்கனியை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து முனி 4 படத்தின் படப்பிடிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் லாரன்ஸ். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர…. மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.. ஏப்ரல் மாதம் 18 ம் […]

Continue Reading

விஷாலின் நீண்ட நாள் கனவு நனவிகிறது..!!

சினிமாத்துறையில் இயக்குநராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து முடித்ததும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நடிகரானார். அவருடைய நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர்களால் கவரப்பட்டார். மேலும், அவருடைய நேர்மையான நடத்தையினால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பல சாதனைகள் புரிந்து வருகிறார். திரையுலகில் அவர் காணும் இந்த வெற்றிப் பயணத்திற்கிடையில், அவருடைய நீண்ட நாள் கனவான இயக்குநர் கனவு கூடிய விரைவில் நனவாகப் போகிறது. […]

Continue Reading

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் பிரபல நடிகர்..!!

கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘இந்தியன்’. ‌ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.    கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படம் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால், ரிலீசுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன. […]

Continue Reading

வேகம் எடுக்கும் சன் பிக்சர்ஸ்..!!

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவர இருக்கிறது ‘சர்கார்’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தினையும் இந்நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிலையில், சூர்யா – ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தினையும், சிவகார்த்திகேயன் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். இன்னும் சில படங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் […]

Continue Reading

மீண்டும் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி..!!

‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, […]

Continue Reading