நடன இயக்குனரை திருமணம் செய்யவிருக்கும் சாந்தினி!

நடன இயக்குநர் நந்தாவை நாளை (டிசம்பர் 12) திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளார் நடிகை சாந்தினி. பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான ‘சித்து +2’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. அதைத் தொடர்ந்து ‘வில் அம்பு’, ‘என்னோடு விளையாடு’, ‘கவண்’, ‘வஞ்சகர் உலகம்’, ‘பில்லா பாண்டி’, ‘வண்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ‘வணங்காமுடி’, ‘டாலர் தேசம்’ உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இடையே […]

Continue Reading

சென்னையில் பாகுபலி 2 வசூலை முறியடித்த ‘2.0’!

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 19-ம் தேதி வெளியான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழை விட இதர மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் ‘2.0’ தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்தது. இதனால், சென்னையில் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் ‘பாகுபலி 2’ சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பலரும் எதிர்பார்த்தது போலவே […]

Continue Reading

செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலில் பா ரஞ்சித்!

வருடந்தோறும் ஜிக்யூ இதழ் செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் சினிமா, தொழில், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் சாதனை படைத்த 40 வயதுக்கு உட்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். 2018-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் நடிகர்கள் பா இரஞ்சித், நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, பார்வதி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல ஸ்டீரியோடைப்களைத் தவிர்த்து திரைப்படங்களை இயக்குவதற்கும் தலித் மக்களின் வாழ்க்கையைப் பேசுவதற்காகவும் இயக்குநர் ரஞ்சித் தேர்வு செய்யப்பட்டதாக ஜிக்யூ தெரிவித்துள்ளது. அத்துடன் சாதிய எதிர்ப்பு […]

Continue Reading

கனா படத்தில் சிவகார்த்திகேயனின் ரோல் இதுதான் – இயக்குனர் அருண்ராஜா காமராஜ்!

‘கனா’ அதன் பாடல்கள் மற்றும் காட்சி விளம்பரங்களின் மூலமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. குறிப்பாக, சிவகார்த்திகேயன் ஒரு புதிய தோற்றத்தில் திரையில் தோன்றியது, அதன் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரோ என்ற சில அனுமானங்கள் உண்டு, ஆனால் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அந்த விஷயங்களை பற்றி கூறி, நம்மை ஆச்சரியப்படுகிறார். சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த […]

Continue Reading

மீண்டும் யோகியாக களமிறங்கும் தன்ஷிகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ‘யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தன்ஷிகா. ஒரு ஆணுக்கு இனையான கம்பீர தோற்றத்துடன் கிராப் தலையுடன் கையில் துப்பாக்கியுடன் ஒரு புரொஃபஷனல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது உடல் மொழியாலும் ஆக்ஷன் ஸீக்வன்ஸ்களிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதே போல் தான் எடுக்கும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி நடிக்கும் இயல்பு கொண்ட தன்ஷிகா சினிமா உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். […]

Continue Reading

பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கிறது. “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் […]

Continue Reading

மன்சூர் அலிகான் இயக்கிய ”கடமான் பாறை” படத்திற்கு “A” சான்றிதழ்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படம் “கடமான்பாறை”. இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி […]

Continue Reading

‘மஹா’வாக ஹன்சிகா!

ஹன்சிகா மோத்வானி நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த போஸ்டர்கள் வைரல் ஆகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஹன்சிகா மோத்வானி என்ற பெயருக்கு முன் “இளவரசி” என்ற தலைப்பை, மிக உற்சாகத்துடன் போஸ்டரில் அறிமுகப்படுத்தியிருந்தார் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல்.   “ஆம், நிச்சயமாக அவர் ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் ஹன்சிகா. நாயகி […]

Continue Reading