இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்

  தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அர்ஜுன் தாஸ்  இன்னும் இரு படங்களில் நடித்து வருகிறார். அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி 2 விலும்,  அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் யார் ? எங்கிருந்து வருகிறார்? துபாயில் வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த அர்ஜுன் தாஸ், ஒரு நடிகனாக வேண்டும் என்ற தனது நெடு நாள் கனவை பூர்த்தி செய்ய, தனது வேலையை […]

Continue Reading

கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.

அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு சிறு நேர் காணல்… தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ? தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் யூ டர்ன். அதற்குப்பிறகு அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்துல ஒரு கேரக்டர் நடிச்சுருக்கேன். ஃபிளாஷ்பேக்ல ஹீரோ மாதிரி ரத்தினம்னு ஒரு கேரக்டர். சுசீந்தரன் சாரோட […]

Continue Reading

சர்வதேச விழாக்களில் கலந்துகொள்ளத் தயாராகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..!

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.  தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை […]

Continue Reading

இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்!

உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’ . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.  ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் மல்டிமீடியா படித்த பெங்களூர்க்காரர் . சில ஆண்டுகள் எஸ் .ஜே .சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர். படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது, ” இது ஒரு பேய்ப் படம் தான் .ஆனால் […]

Continue Reading

டக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல்

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் மகனை ஹீரோவாக்கி காமெடி படம் இயக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான் அவருடன் உரையாடியதிலிருந்து… இப்படி ஒரு படத்தில பையன ஹிரோவா அறிமுகப்படுத்தனும்னு எந்த ஒரு திட்டமும் கிடையாது. இது தானா அமைஞ்சது. பையனோட  அனுபவத்த அவர் சொல்வாரு. என்னைப் பொறுத்தவரைக்கும் இத நான்  என்னோட முதல் படம் மாதிரி தான் செஞ்சிருக்கேன். இது வரை எடுத்த படங்கள்ல தங்கர்பச்சான் படத்தில என்னென்ன இருக்குமோ அது எதுவுமே இதுல இருக்காது. இது என்னோட […]

Continue Reading

தல 60; இணையத்தை அதிர வைத்த தல ரசிகர்கள்!

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க வெளிவந்த படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’. நல்ல ஒரு கருத்தோடு வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது, நல்ல வசூலையும் ஈட்டிக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தல அஜித். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக காலையில் இருந்தே சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள். ‘#THALA60PoojaDay’ என்ற டேக் லைன் இந்திய அளவில் […]

Continue Reading

இமயமலைப் பகுதிக்கு 10 நாள் ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ,

கம்பளிப் போர்வை, குல்லாவுடன் நடிகர் ரஜினி இமயமலைப் பகுதியில் வழிபாடு நடத்தும் படங்கள் வெளியாகியுள்ளன இமயமலைப் பகுதிக்கு 10 நாள் ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் , அங்குள்ள பத்ரிநாத், கேதார்நாத் , பாபாஜி குகை உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களில் வழிபாடு செய்தும் , தியானம் மேற்கொண்டும் வருகின்றார் . இந்நிலையில் குளிர்மைப் பிரதேசமான இமயமலைப் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் அதற்கேற்ற முறையில் குல்லா அணிந்தும் , கம்பளிப் போர்வை போர்த்தியும் சராசரி பக்தர்களில் […]

Continue Reading

24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் எதிர்வினையாற்று 24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’ தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை. இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.  இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இசை – ஷெரீப் (அருவி புகழ் வேதாந்த் பரத்வாஜ் இசையில் ஒரு மெல்லிசை பாடல் உருவாகி இருக்கிறது) ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன் படத்தொகுப்பு – சந்திர சேகரன் கலை – பாலா ஓம் பிரகாஷ் தயாரிப்பு – தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்

Continue Reading

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் யுவன்சங்கர் ராஜா ஹர்பஜன் சிங்

எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் டிக்கிலோனா படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.  அதேபோல் தற்போதும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இசை அமைப்பாளாராக யுவன் […]

Continue Reading

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான் இர்பான் பத்தான்  தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம்  ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் […]

Continue Reading