ரசிகர்கள்தான் எனது பலம் – நடிகை ராஷ்மிகா

கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “நடிகர்களுக்கு ரசிகர்கள்தான் பலம். எவ்வளவு நன்றாக நடித்தாலும் ரசிகர்கள் பலம் இருந்தால்தான் ஆதரவு மேலும் கிடைக்கும். புதிய படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் பேனர் கட்டுவது, கொடி தோரணங்கள் அமைப்பது எல்லாமே ரசிகர்கள்தான். ரசிகர்கள் இல்லாமல் உயர முடியாது என்று நடிகர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஒவ்வொரு நடிகரும் ரசிகர் மன்றம் வைத்து ரசிகர்களை கவரவிக்கிறார்கள். நானும் ரசிகர்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கிறேன். […]

Continue Reading

கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்வை கிண்டல் செய்த பிரபல நடிகர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய சென்னை அணி 10 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது. சென்னை அணி எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் […]

Continue Reading

தங்கையுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்…வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் […]

Continue Reading

ஹாத்ரஸ் சம்பவம்…. ஆவேசமாக பேசிய நடிகை மதுபாலா

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது. இதற்கிடையே, ஹாத்ரஸ் சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பல துறையை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜென்டில்மேன் பட நடிகை மதுபாலா தமது இன்ஸ்டாகிராம் […]

Continue Reading

நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்

இந்தி திரையுலகின் முன்னாள் கதாநாயகி பூஜா பெடி. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கோவாவில் வசித்து வரும் பூஜா பெடி தனது கணவருடன் இணைந்து சொந்தமாக தொழில் செய்கிறார். இவரது வர்த்தக இணையதளத்தை முடக்கிய மர்ம நபர்கள், அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கோவா போலீஸ் டி.ஜி.பி.க்கு பூஜா பெடி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “எனது வர்த்தக இணைய தளத்தை ஹேக்கர்கள் முடக்கி பணம் கேட்டு […]

Continue Reading

மெலிந்த தேகத்தில் சஞ்சய்தத் வைரலாகும் புகைப்படம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவருக்கு இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சஞ்சய்தத் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் சஞ்சய்தத் மெலிந்து காணப்படுகிறார். […]

Continue Reading

மீண்டும் தள்ளிப்போகும் ரஜினியின் அண்ணாத்த ஷூட்டிங்

ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே ஐதராபாத்தில் தொடங்கி பாதி முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதால் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்கும் முடிவில் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. பிற நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்கள். இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. படப்பிடிப்பில் அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பணியாற்ற வேண்டி […]

Continue Reading

தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் – மத்திய அரசு விளக்கம்

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன மத்திய அரசு வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது: ”திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி […]

Continue Reading

விரைவில் திருமணம் தொழில் அதிபரை மணக்கும் காஜல் அகர்வால்

தொழில் அதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது. காஜல் அகர்வால் தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து முனன்ணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு 2013-ல் திருமணம் நடந்தது. தொடர்ந்து காஜலுக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திருமணத்தை தள்ளிவைத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். […]

Continue Reading

மனோபாலா தலைவராக தேர்வானது செல்லாது: ரவிவர்மா

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக மனோபாலா தேர்வானது செல்லாது என ரவிவர்மா கூறியுள்ளார். சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவிவர்மா மீது அதிருப்தியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி அவரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக நடிகர் மானோபாலாவை தேர்வு செய்தனர். இதனை கண்டித்து ரவிவர்மாவும் அவரது ஆதரவாளர்களும் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “சின்னத்திரை நடிகர் சங்கம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எந்த முறைகேடும் நடக்கவில்லை. சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது மனோபாலா, […]

Continue Reading