காதலிக்கு பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் கொடுத்த விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஷ்ணுவிஷால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளான இன்று […]

Continue Reading

“நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன்.- ராஷ்மிகா

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காமரேட் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மண்டனா. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது மறைந்த நடிகைகைகள் ஸ்ரீதேவி, சவுந்தர்யா ஆகியோர் வாழ்க்கை கதை படங்களில் யாருடைய வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது […]

Continue Reading

முகக்கவசம் அணியுங்கள்.பாதுகாப்பாக இருங்கள் – அபிஷேக் பச்சன் வேண்டுகோள்

அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்தே நிற்கின்றன. மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க […]

Continue Reading

‘அவள்’ பட இயக்குனருடன் இணையும் ராணா

சித்தார்த் நடித்த ‘அவள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிலிந்த் ராவ். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டுள்ளது. இது பிளைண்டு எனும் கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ராணா நடிக்கவுள்ள படத்தை மிலிந்த் ராவ் […]

Continue Reading

புதிய தோற்றத்தில் சந்தானம்

சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் திடீரென்று கதாநாயகனாக மாறினார். அவரை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன. இதையடுத்து கதாநாயகனாக நடிக்க படங்கள் குவிகின்றன. அதற்கேற்ப கடும் உடற்யற்சிகள் செய்து தோற்றத்தையும் மாற்றி இருக்கிறார். நடிகர் ஆர்யாவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட தூரம் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்தும் தேகத்தை மெருகேற்றுகிறார். தற்போது பிஸ்கோத், […]

Continue Reading

வில்லி வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது – நிவேதா தாமஸ்

ரஜினியுடன் தர்பார், கமலுடன் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் வந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் நானியுடன் நடித்துள்ள வி படம் நாளை மறுநாள் (5ந்தேதி) ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:- “வி படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யத்தான் எடுத்தனர். கொரோனா காரணமாக ஓ.டி.டியில் வெளியிடுகிறார்கள். நாம் எல்லோரும் பக்கத்தில் இருக்கிற கடைகளுக்கு செல்லவே யோசிக்கிறோம். தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பது உறுதியாகவில்லை. மத்திய அரசு அறிவித்த தளர்வில் கூட தியேட்டர் இல்லை. ஒருவேளை […]

Continue Reading

ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய வித்யாபாலன்

நடிகை வித்யாபாலன் ரியாவுக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பில் சிக்கி உள்ளார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கிறது. அவரை நடிகை ரியா சக்கரவர்த்தி காதலித்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை வித்யாபாலன் ரியாவுக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பில் சிக்கி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ரியாவை வில்லியாக சித்தரிப்பதை […]

Continue Reading

கட்டுப்பாட்டைப் பெரிதும்…. கைக்கொள்வீர் பெருமக்களே – வைரமுத்து டுவிட்

தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தியதன் மூலம் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பஸ்போக்குவரத்து தொடங்கியது. அலுவலகங்கள் செல்லும் ஊழியர்களால் சாலைகளில் கார், இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தன. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களிலும் மக்கள் குவிந்தனர். இ-பாஸ் ரத்தினால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இது ஒரு புறம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இந்த தளர்வினால் கொரோனா பரவுமோ என்ற பீதியும் நிலவுகிறது. அதிகம் பேர் முககவசம் அணியவில்லை […]

Continue Reading

ஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக்

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக் தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். அப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது ‘தி சேஸ்’ கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு […]

Continue Reading

மக்கள் கவனமாக இருக்க வேண்டும் கமல்ஹாசன் வேண்டுகோள்

வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “ தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் […]

Continue Reading