‘எவனென்று நினைத்தாய்’ கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி?

மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மாஸ்டர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் 232-வது படமான ‘எவனென்று நினைத்தாய்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் […]

Continue Reading

போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் யார் என்று சொல்ல தயார் – ஸ்ரீ ரெட்டி

திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் […]

Continue Reading

ரூ.2 கோடி சம்பளம் கேட்கும் சாய்பல்லவி

மலையாளத்தில் பிரேமம் வெற்றி படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு தமிழ், தெலு ங்கு படங்களில் வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் பிரேமம் வெற்றி படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு தமிழ், தெலு ங்கு படங்களில் வாய்ப்புகள் வந்தன. சூர்யாவுடன் என்.ஜி. கே. தனுசுடன் மாரி 2 படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் விராட பருவம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் நக்சலைட் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் முடங்கிய லவ் […]

Continue Reading

சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா

சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான்  ” அருவா சண்ட “தயாரிப்பாளர் வி.ராஜா அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாடல் ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் V.ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் ” அருவா சண்ட ” கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் முக்கிய வேடங்களில்  சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, இவர்களுடன் காமெடி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் […]

Continue Reading

ஓ.டி.டி.யில் ரிலீசாகும் விஜய்சேதுபதியின் 2 படங்கள்

கொரோனா பரவலால் தியேட்டர்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புதிய படங்கள் திரையரங்குகளுக்கு பதிலாக இணையதளமான ஓ.டி.டி.யில் வெளியாகி வருகின்றன. பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படம் அடுத்த மாதம் 2-ந்தேதி ஜிபிளக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். […]

Continue Reading

புதிய சிக்கலில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் ஒரு பாடலில், சாதி பிரச்சினையை தூண்டும் விதமான வரிகள் வருவதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சூரரைப்போற்று படத்தில் வரும் “மண் உருண்ட மேல… மனுச பையன் ஆட்டம் பாரு” என்று தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? […]

Continue Reading

பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் நடிகை மீனா!!!

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க […]

Continue Reading

பிக்பாஸ் சீசன் 4-இல் கலந்துகொள்ளும் அஜித் பட ஹீரோயின்?

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் […]

Continue Reading

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ. சென்னை, செப். 15, 2020: ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய […]

Continue Reading

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா!!!

தமிழ் சினிமாவில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலக திறப்பு விழாவில் பாரதிராஜா, […]

Continue Reading