கொரோனாவால் திருமண தேதியை முடிவு செய்யமுடியாத தவிப்பில்-நடிகை மியா ஜார்ஜ்

தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மியா ஜார்ஜுக்கும் கட்டுமான நிறுவனம் நடத்தும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்தும் கொரோனாவால் திருமண தேதியை முடிவு செய்யமுடியாத தவிப்பில் குடும்பத்தினர் உள்ளனர். இதுபற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது: “எனது […]

Continue Reading

எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி

அன்பு ரசிகப் பெருமக்களுக்கு… உங்கள் அப்புக்குட்டியின் இனிய வணக்கம்… கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்… நம் எல்லோரின் வேண்டுதலும் இப்போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக்டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான். விரைவில் இது நடக்கும் என்று நம்புவோமாக… கொரோனாவால் எல்லா தொழில்களைப் போல, திரைப்படத்தொழிலும் முடங்கித்தான் கிடக்கிறது. இக்காலகட்டத்தில் நமக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவும் சமூக ஊடகங்களும்தான்… பழைய சினிமாக்களை, உங்களுக்கு பிடித்தசினிமாக்களை, காமெடி க்ளிப்பிங்ஸ்குகளை ஆன்லைன் தளத்தில் பார்த்து பார்த்து ரசித்திருப்பிர்கள்… […]

Continue Reading

பாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது – தயாரிப்பாளர் சிங்காரவேலன்

இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து கூறும்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த சங்கத்தில் 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை. இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பாரதிராஜா சில தயாரிப்பாளர்களை சேர்த்துக் கொண்டு புதிய சங்கம் ஆரம்பித்து […]

Continue Reading

டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்

      கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக திரையுலகை சேர்ந்தவர்கள் குறை கூறி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் பிரசன்னா தனது வீட்டுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் கூறினார். அதனை மின்சார வாரியம் மறுத்து விளக்கமும் அளித்தது. தொடர்ந்து நடிகை கார்த்திகா மும்பை மின்வாரியம் தனது வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் விதித்துள்ளதாக குறைகூறினார். இது பரபரப்பானது.  இந்த நிலையில் நடிகை டாப்சியும் தனக்கு அதிக மின்கட்டணம் விதித்துள்ளதாக கோபத்தில் இருக்கிறார். […]

Continue Reading

  சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள -நடிகர் ஜெயம் ரவி

சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்ததால் அவரது உடல் தமிழக சுகாதாரத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த ஜெ.அன்பழகன் அரசியலைத் தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருந்தவர். எனவே திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி […]

Continue Reading

எப்போதும் சர்ச்சையை இழுத்துப் பிடித்து கொண்டே இருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா..

          உலகின் முதல் கொரோனா குறித்த திரைப்படமாக ‘கொரோனா வைரஸ்’ என்ற பெயரில் முழு நீள படத்தையும் இந்த லாக்டவுனுக்கு இடையில் இயக்கி, அதன் சுவாரஸ்யமான ட்ரைலரையும் சமீபத்தில் வெளியிட்டார். அதையடுத்து, இரு தினங்களுக்கு முன் ‘Naked Nanga Nagnam’ என்று பெயர் வைத்துள்ள தனது அடுத்த படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டார்.             இந்நிலையில், இன்னிக்கு மேலும் இரண்டு புதிய திரைப்படங்களை அவர் அறிவிச்சிருக்கார். […]

Continue Reading

திரைக்கு வரும் “மாயபிம்பம்“ திரைப்படம்!

            சினிமாவில்  கதையே அரசன் என்பதை காலம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. புத்தம் புது நடிகர்கள்,  பெரும்பெயரற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருந்தாலும் கதை நன்றாக இருப்பின் அப்படங்கள் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. ஆனால் இத்தகைய புது முயற்சிகள் அத்தனை சீக்கிரம் திரையை அடைவதில்லை அதற்கு மிகப்பெரும் ஆளுமைகளின் பெரும் பாராட்டுக்கள் தேவைப்படுகிறது. இம்மாதிரியான புதுமுகங்களுடைய  படத்தின் வெளியீட்டிற்கு பெரும் ஊக்கமாக அந்த பாரட்டுக்கள் அமைகிறது. அந்த வகையில் […]

Continue Reading

கனியின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா” !

இயக்குநர் திருவின் மனைவியும் தேசிய விருது வென்ற இயக்குநர் அகத்தியன் அவர்களின் மகளுமாகிய கனி தனது புத்தம் புது பயணத்தை “ஒரு ஊர்ல ஒரு ராஜா” நிகழ்ச்சி  மூலம் துவங்கியுள்ளார். சமீபத்தில் Yotube தளத்தில் Theatre D சேனலில்  வெளியாகியுள்ள “ஒரு ஊர்ல ஒரு ராஜா” எனும் இந்நிகழ்ச்சி வரலாற்றை  கதை சொல்லல் முறையில் சொல்வதில் புது அலையை உண்டாக்கி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரித்துள்ளார் இயக்குநர் திரு. இந்தப் […]

Continue Reading

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்     தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

Continue Reading