வரலாறு புகழும் நாயகி சவுக்கார் ஜானகி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது, ஒன்றிய அரசுக்கு நன்றி!! நடிகர் நாசர்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் திரையுலகின் பல சாதனைகள் படைத்திட்ட வரலாற்று புகழ் நடிகை   சவுக்கார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பத்மஶ்ரீ விருதை அறிவித்து கௌரவித்துள்ளது. தமிழ் சினிமா நடிகர் நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளது. சவுக்கார் ஜானகி தன் 14 வயதிலேயே மேடை நாடகம் மூலம் நடிப்பு துறையில் கால்பதித்தவர், தன் 18 வயதில் 1949 ஆம் ஆண்டில் ‘சவுக்கார்’ எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ்,தெலுங்கு, […]

Continue Reading

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் சல்மான், காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பு பாடல்

எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் பாடலான ‘தோழி’ மிகவும் அழகாக உருவாகியுள்ளது.மதன் கார்க்கியின் மந்திர வரிகளில், கோவிந்த் வசந்தாவின் ஆத்மார்த்தமான […]

Continue Reading

சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘மகான்’. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. ‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ‘யெவ்வர்ரா மனகி கஸ்டடி..’ என்றும், மலையாளத்தில் ‘இனி ஈ லைப்ஃபில்..’ என்றும், கன்னடத்தில் ‘யவனோ நமகே கஸ்டடி..’ என்றும் வெளியாகியிருக்கிறது. […]

Continue Reading

ஹிட் ஆன ‘கணம்’ படத்தின் ஆன்மாவான ‘அம்மா’ பாடல்!

ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி ‘கணம்’ படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருப்பது சிறப்பம்சம்.வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’.அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’,‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய […]

Continue Reading

“தி வாரியர்” திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை புரிந்திருக்கிறது !

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுல் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார், மேலும் இரு மொழிகளில் உருவாகும் இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது. தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் […]

Continue Reading

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ டைட்டில் லுக் வெளியீடு

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ரேக்ளா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.   ‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் ‘ரேக்ளா’. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் பணியாற்றும் […]

Continue Reading

சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நான் ஒரு அங்கமாக உள்ளேன். -நடிகர் அபிஹசன்.

  அன்பான ஊடக நண்பர்களுக்கு எனது இனிய வணக்கம்.. உயர்திரு கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நான் அறிமுகமானேன். இதுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள், அதற்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.     இப்போது, ஏஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் ஒரு அங்கமாக உள்ளேன். நான்கு கதைகள் கொண்ட இந்த […]

Continue Reading

7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி !

சுசீந்திரன் அறிவிப்பு.   இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர். நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் […]

Continue Reading

Etcetera entertainments தயாரித்துள்ள “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது.

நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR  கௌரவ  பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்க்கள் இப்படத்தில் இணைந்து […]

Continue Reading

நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் ‘வெப்’..!

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.’எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தின் நாயகி ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா […]

Continue Reading