வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் வெளியிடும் பூ சாண்டி வரான்…

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள  இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், […]

Continue Reading

ஸ்ரீ அண்ணாமலையார் முவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி.

சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதா பாத்திரங்களையும் இணைத்து சொல்லப்பட்ட இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்யும். […]

Continue Reading

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும், “அமீகோ கேரேஜ்” படத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடிய மெலோடி பாடல் !

  முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில்,  இசையமைப்பாளர், நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர். சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் முதல் பாடலை பாடியிருந்தார்.  இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து இப்படத்தின் இரண்டாவது மெலோடி பாடலை பாடியுள்ளனர். திரையுலகின் […]

Continue Reading

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய் சேதுபதி

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில் இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை […]

Continue Reading

நடிகர் R.மாதவன், இயக்கத்தில்  “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் டிரெய்லர்  துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் மிக உயரிய வரவேற்பை பெற்றது

துபாய் எக்ஸ்போ 2022 வில் திரையிடப்பட்ட   நடிகர் R. மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்வின் சுவாரசியமான பகுதி என்னவென்றால், பிரமாண்டமான டிரெய்லரைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். சிறப்பு அழைப்பாளர்களுடன் உரையாடுவதற்காக மாண்புமிகு – ராக்கெட் விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் அவர்கள் மேடை ஏறியதும் அவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். இந்த உரையாடல் நிகழ்வின் […]

Continue Reading

Olympia Movies S. அம்பேத் குமார் வழங்க, கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில், உருவாகும் “Production No.4” படத்தில், நடிகர்கள் K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள் !

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர்  S.அம்பேத் குமார் பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வருகிறார். அவரது அடுத்த தயாரிப்பாக உருவாகும் “Production No.4” படத்தினை கணேஷ் K பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள்  நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு,  மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக  நடந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால்,  படத்தின் மீது ஏற்கனவே  எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு […]

Continue Reading

வஞ்சம் தீர்த்தாயடா படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் சுசி கணேசன்

விரும்புகிறேன் பைவ் ஸ்டார்,திருட்டுப்பயலே, கந்தசாமி உட்பட தான் இயக்கிய ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமான கதைக்களத்தில் கொடுத்து தனது தனித்துவத்தை நிரூபித்தவர் இயக்குநர் சுசி கணேசன். தற்போது அடுத்ததாக தான் இயக்குகின்ற ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படம் மூலம், “80 – களில் மதுரை “யை மய்யமாக வைத்து ஆக்‌ஷன் டிராமா தளத்தில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகர்களில் ஒருவரை கண்டறியும் புதிய முயற்சியாக ‘வருங்கால சூப்பர்ஸ்டார் 2022’ என்கிற ஷோ அறிவிப்பானது, திரையுலகில் நுழைந்து நடிப்பில் சாதிக்க […]

Continue Reading

திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில், திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு டிவிவி தானய்யா தயாரித்த ‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் […]

Continue Reading

சிவகார்த்திகேயனின் “SK 20” திரைப்படத்தில், உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் நாயகி குறித்து அற்புதமான தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.   இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரும் பலமாக அமையும் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் நம்புகிறார்கள். சர்வதேசத் திரைப்படங்களில் தனது […]

Continue Reading

பிரமாண்டத்தின் உச்சம் !!! அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது.

தமிழ் ஓடிடி இயங்குதளங்களில்   மறுக்கமுடியாத வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும்  வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய  சிறப்பு மிகு படைப்புகள்  வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய  ஆக்‌ஷன் அதிரடி  திரைப்படமான ‘வலிமை’ படத்தின்  உலகளாவிய டிஜிட்டல் பிளாக்பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது. ‘வலிமை’ படம் ஜீ5 […]

Continue Reading